உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/102

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

தேவிற் சிறந்த சிவனே செழுங்குவளைப் பூவிற் பொலிந்த புகழுமையைப் புல்கினையே பூவிற் பொலிந்த புகழுமையைப் புல்கிலையேல் நாவிற் புகலுலதற்கு நல்லுயிரொன் றுண்டாமோ? மங்கையொரு கூறுடையாய் மாதவனாய் நீயமர்ந்து பொங்கு சடையும் புலித்தோலும் பூண்டனையே பொங்கு சடையும் புலித்தோலும் பூண்டிலையேல் இங்குளார் எல்லாம் இணைவிழைச்சில் இழிகுவரே!

முப்புரங்கள் செற்றனையோ மும்மலங்கள் செற்றனையோ எப்புரமும் எரிக்கவல எந்தாய்க் கெதுசிறப்பு? எப்புரமும் எரிக்கவல எந்தாய்க் கிரண்டொன்றாம்

அப்புரங்கள் அழித்ததனை அருஞ்செயலாய் அறைகு வரோ?

69

குலசேகரன் : ஆ! ஆ! எளிதாக இனிதாகத் தமிழ்ப் பாட்டுக்கட்டியது மல்லாமல், அமராவதி அதனை யாழில் இசைத்துப் பாடியதும் என்னறிவையே பிறிதாக்கிவிட்டது!

சோழன் : (மகிழ்ந்து) மைத்துன! இப்பாட்டின் பொருளைப் புதல்வி நடித்துக் காட்டுவதும் நன்றாயிருக்கின்றதா வென்று பாருங்கள்! (அமராவதியை நோக்கி) அம்மா அமராவதி! நீ ய நீ பாடிய இவ்வினிய பாட்டின் பொருளைச் சிறிது நடித்துக் காட்டி எல்லாரையும் உவப்பி!

அமராவதி அங்ஙனமே நடிக்க எல்லாரும் மிக மகிழ்கின்றனர்)

குலசேகரன் : அமராவதியின் நடனக்காட்சி பேரின்பக் காட்சியாகவே விளங்குகின்றது! இதற்குமேல் எனக்கு ஏதுஞ் சொல்லத் தெரியவில்லை!

சோழன் : மைத்துன! நீங்கள் மீண்டும் மதுரை செல்லும்

வரையில் இடை இடை யே கன்னிமாடத்திற் சென்று அமராவதியின் முத்தமிழ்ப் பயிற்சியையுங் கண்டுங் கேட்டுங் களிக்கலாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/102&oldid=1580704" இலிருந்து மீள்விக்கப்பட்டது