உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

68

மறைமலையம் 12

(கோமாளி முடங்கிய கையை விலாப்புடையில் அடித்துக் கொண்டு நாவைச் சுவைத்துக் கொண்டும் வர, எல்லாரும் நகைத்தபடியாய்க் கோயிலினுள்ளே சென்று இறைவனையும் இறைவியையும் தொழுது நிற்கக், குருக்கள் வழிபாடு நடத்த, முடிவில்)

ங்கே

சோழன் : (அமராவதியை நோக்கி) அம்மா அமராவதி! நீ இயல் இசை நாடகம் என்னும் முத்தமிழும் நன்கு பயின்று வரும் பயிற்சியினை இங்கே கடவுள் முன்னிலையிலும் நம் அரண்மனையிலும் பலகாற் பாடியும் ஆடியுங் காட்டி யதனை நாங்கள் கண்டு களித்திருக்கின்றோம் ஆனால், வந்திருக்கும் நின் அருமை மாமன் குலசேகர பாண்டியன் அவற்றைக் கேட்டதும் பார்த்ததும் இல்லை. ஆதலால், அம்மையப்பர் மேல் நீயே ஒரு கலிப்பாட்டு இயற்றி அதனை யாழில் இட்டுப் பாடி அதனை நடித்துங்காட்டி எங்களை மகிழ்வி.

(குலசேகரன் அமராவதியின் பாட்டையும் ஆட்டத்தையுங் காணவுங் கேட்கவுந் தனக்கெழும் பேரவாவினை முகத்தாலுங் கையாலுங் குறிப்படுகின்றான்; எல்லாரும் அங்ஙனமே; ஆனால், அமராவதி நாணத்துடன் நிற்க)

அரசி : அம்மா! குழந்தே ! இதற்கேன் இவ்வளவு வெட்கம்! குலசேகரன் என்னுடன் பிறந்த என் தம்பிதானே. அவன் நீள உன்னுடன் பழகாவிட்டாலும் அவன் உனது கல்வித் திறமையைக் காணுதற்கு எல்லா வகையிலும் உரிமை யுடையவனே. யவனே. ஆகையால், உன் தந்தையார் சொல்கிறபடியே சய்! (அமராவதியின் முகத்தை யுயர்த்தி நெற்றியைத் துடைக்க)

அமராவதி:

(தாய் தந்தையரை வணங்கி) அப்பா விரும்பியபடியே செய்கிறேன் அம்மா! (எல்லாரும் கடவு ளெதிரே அமர, அமராவதியும் அமர்ந்து யாழைக் கையி லெடுத்துத் தான் இறைவன்மேல் இயற்றிய இசைப்பாவினை அதிலிருந்துப் பாடுகின்றாள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/101&oldid=1580703" இலிருந்து மீள்விக்கப்பட்டது