உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/100

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

67

கதிரவன் ஒளிதோய்ந்த இக்கோயிற் கொடுமுடிமேற்காணுந் திருக்குட மானது, “வானவர் பாற்கடலிற் பெற்ற குடத்தின் அமிழ்தமானது என்றுமே சாவாநிலையினைப் பயப்பதன்று; மற்று என்னகத்தே நிரம்பிய அமிழ்தமோ சிவபிரான் திருவருட் பேரமிழ்தமாகும்; அதனை நீவிர் பருகி என்றும் அழியா அருட் பேரின்பத்தைப் பெரும் பொருட்டே க்கோபுரமாகிய பூதத்தின் தலைமேற் சுமக்கப்பட்டு வானளாவி நிற்கின்றேன்” எனப் புகன்று திகழ்வதுபோற் காணப்படுகின்றது!

அமைச்சர் : ஆ! ஆ! யாங்கள் கூறிய புனைந்துரை யினும், அரசியார் இயம்பிய புனைந்துரையே, இறைவனை வழிபடச் செல்லும் எமக்கு இறைவன்றன் அருள் வழக்கத் தினை நினைப்பித்து, இந்நேரத்திற்குச் சாலச்சிறந்த தாய்த்

தோன்றுகின்றது!

கோமாளி : ஐயயோ! இந்தக் கோவுரம் பூதமா? இதின் வாய்க்குள்ளவா நாம்ப எல்லாம் நுளையப் போறோம். அம்மா! மாராசா! நான் வரமாட்டேன். என்னை விட்டு டுங்கோ! என் பெண்டாட்டிக்கி யாருதுணை? எனக்குச் சாமியும் வேணாம் பூதமும் வேணாம். (எல்லாருஞ் சிரிக்கின்றனர்)

சோழன் : ஏடா துத்தி! இது கோபுரந் தானடா, பூதம் அன்று; பூதம் போற் பெரிய வடிவமாகக் காணப்படுவதால் அரசி அங்ஙனஞ் சொன்னாள். உனக்குக் கண் இல்லையா? நன்றாய்ப்பார்! அஞ்சாதே!

கோமாளி : (தன் கண்களைத் தடவிப்பார்த்து) ஆமா, மாராசா! எனக்குக் கண் இருக்கு, இருக்கு, ஆமா து கோவுரந்தான். அது மேலே உள்ள குடத்திலே அமுதம் இருக்கு என்று அம்மா சொன்னாங்களே; அதிலே எனக்கு (குடங்கையைக் காட்டிக் கெஞ்சுகின்றான்)

சோழன் : நாம் கோவிலினுள்ளே சென்று சிவபிரானை யும் பிராட்டியையும் வணங்கியதும், முக்கனியுங் கற்கண்டுந் தேனும் பாலுங் கலந்த தேவாமிர்தம் உனக்கு ஏராளமாய்க் கிடைக்கும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/100&oldid=1580702" இலிருந்து மீள்விக்கப்பட்டது