உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

66

மூன்றாம் நிகழ்ச்சி : மூன்றாங் காட்சி

களம் : தஞ்சைச் சிவபிரான் திருக்கோயில்

நேரம் : காலை

(சோழன், சோழன் மனைவி, அவர் மகள் அமராவதி, குலசேகரபாண்டியன், அமைச்சர், காவலாளர் முதலியோர் வருகின்றனர்.)

சோழன் : இவ் விளவேனிற்காலத் துவக்கத்தின் காலை வேளை பனிக்காலக் கழிவில் தோன்றியிருத்தலால், தண் ணனும் புனலிற் றலைமுழு கி இறைவனைத் தொழச் செல்வார்க்கு ஈது எவ்வளவு இனியதாய்க் காணப்படு கின்றது! சிறிதே மூடிய பனியினைக் கீறிக்கொண்டு புறப்படும் பகலவன், அரக்கரின் மாயவலையினைக் கிழித்துக் காண் புறப்படுந் திருமாலின் திகழ்தலைப் பார்ன்மிகள்!

திகிரிப்படைபோல்

அமைச்சர் : ஆம் பெரும! இக்கதிரவனது வட்ட வடிவந் தேன் முற்றிய தேனடை போலவும், அதிலிருந்து பாயுங் கதிரொளிகள் அவ்வடையிலிருந்தொழுகுந் தேன் போலவும், இரவெல்லாங் கூடுகளில் அடங்கிக் கிடந்து பசியோடு எழும் பல்வகைப் பறவைகளும் அவ்வொளியினை நோக்கிப் பறந்து செல்வது அத்தேன் ஒழுக்கினைப் பருகச் செல்வது போலவுங் காணப்படுகின்றன.

அரசி : அமைச்சர் இத்தோற்றத்தினை உவமித்துச் சொல்லிய பான்மையில் இயற்கைக் காட்சியே ஓர் அழகிய ஓவியமாய்த் துலங்கா நிற்கின்றது! மேலும் பாருங்கள்!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/99&oldid=1580701" இலிருந்து மீள்விக்கப்பட்டது