உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/98

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

65

வேண்டுந் துணையே அது கூறுதல் வேண்டும். இந்த முறை யிற் பார்த்தால், ஆறறிவுடைய ய மக்களே உயர்திணை யென்பது எல்லாராலுங் கட்புலனாக அறியப்பட்ட உண்மையாகும். மற்றுத், தேவர் நரகர் என்பார் எல்லாராலுங் புலனாற் காணப்பட்டவரல்லர்; அதனால், அவரை உயர்திணை என்று கொள்வது எல்லார்க்கும் உடன் பாடன்று. ஆகவே, தொல்காப்பியனார் மக்களை மட்டும் உயர்திணையென்று வரையறுத்துரைத்ததே சாலவும் பொருத்தமுடைத்தெனக் கருதுகின்றேன்.

அம்பிகாபதி:

இளவரசியாரின் ஆராய்ச்சி யறிவின் திறம் மிகவும் பாராட்டற்பாலது. இனி, இப்போது புற நானூற்றின் கடவுள் வணக்கச் செய்யுளைத் தொடங்கலாம்.

(அங்ஙனமே அமராவதி அதனைப் படிக்க அம்பிகாபதி அதற்குப் பின்னர்ச் சில செய்யுட்களுக்கும் உரை சொல்லி விடைபெற்று நண்பனுடன் இல்லஞ் செல்கின்றான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/98&oldid=1580700" இலிருந்து மீள்விக்கப்பட்டது