உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64

மறைமலையம் 12

அமராவதி : வல்லோசையின்றித் தமிழ்ச்சுவை துளும்பும் இனிய மெல்லோசை வாய்ந்த நடையில் ஆக்கப் பட்டிருத்தலின் சிந்தாமணியுந் திருத்தொண்டர் புராணமும் ஒற்றுமையுடைய வெனவே உரைக்கலாம். நுணுகி ஆராய்ந்து பார்த்தால் இந்த வகையிலும் கூடப் பெரிய புராணமே சிந்தாமணியிலுஞ் சிறந்து திகழ்கின்றது.

L

அம்பிகாபதி : ஆம், ஆம். நடையழகிற் சிந்தாமணியை விடச் ச் சிலப்பதிகாரமே பெரியபுராணத்திற்கு ஒப்பாக நிற்கற்பாலது. பொருண் மாட்சியிலோ பெரியபுராணத்திற்கு ஒப்பாகவோ உயர்வாகவோ நிற்கவல்ல காப்பியம் ஏதுமே யில்லை. இளவரசியார் இலக்கியத்துறையில் இத்துணை ஆழமாக இறங்கி அவ்வந் நூற்றன்மை ஆய்ந்தெடுத்தறிந் திருப்பது மிகவும் வியக்கற்பாலது. அது நிற்க, இலக்கணத் திலும் ஒன்று வினவி அதற்கு மேல் ளவரசியார்க்கு வருத்தங் கொடாமல் நிறுத்துகின்றேன்.

அமராவதி : ஆசிரியர்க்கு விடை கூறுவதிற் சிறிதும் அடியேற்கு வருந்தந் தோன்றவில்லை.

66

அம்பிகாபதி : உவந்தேன். ஆசிரியர் தொல்காப்பியனார் ஆறறிவுடைய மக்களை மட்டுமே உயர்திணை எனக் காண்டு உயர்திணை என்மனார் மக்கட் சுட்டே அஃறிணை என்மனார் அவரல பிறவே” எனக் கூறினார். இக்காலத்தார்க்கு 'நன்னூல்' செய்த பவணந்தியாரோ, மக்கள் தேவர் நரகர் என்னும் முப்பாலாரையும் உயர்

கூறு

திணையெனக்கொண்டு “மக்கள் தேவர் நரகர் உயர்திணை, மற்றுயிருள்ளவும் இல்லவும் அஃறிணை” எனக் கின்றார். இவ்விரண்டில் எது தங்கட்குப் பொருத்தமாகக்

காணப்படுகின்றது?

அமராவதி : இலக்கணமென்பது எல்லாச் சமயத் தார்க்கும் பொதுவான நிலையில்நின்று, ஒரு மொழியின் சொற்பொருள் அமைதிகளைக் கண்ணாற்கண்டு, அறிவான் ஆராய்ந்து காட்டுவது. கட்புலனாகாதவைகளைச் சிறு பான்மை சொல்ல நேர்ந்தால் மொழியமைதியினளவுக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/97&oldid=1580699" இலிருந்து மீள்விக்கப்பட்டது