உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

63

அமராவதி : சொல்லப்பட்டிருக்கின்றது; சுவாமி! காவிரிப் பூம்பட்டினத்திலிருந்த தெய்வங்களின் திருக்கோயில் களைச் சொல்லுங்காற் "பிறவாயாக்கைப் பெரியோன் கோயிலும்” என்று சிவபிரான் கோயிலையே ஆசிரியர் இளங்கோவடிகள் இந்திர விழவூரெடுத்த காதையில் முதற்கண் வைத்துரைக்கின்றார். மற்றைத் தெய்வங்களெல்லாம் பிறந் திருப்பனவாதலால், அவை உண்மையில் தெய்வங்களாகா; அதனால் அவை பெரியனவும் ஆகா; மற்றுச் சிவபெருமா னொருவனே பிறவா ஒளியுரு வினனாகலான் அவனே உண்மையான தெய்வமாவன், அதனால் அவனே பெரியன் (மகாதேவன்) ஆவன் என்று அச்சொற்றொடரில் நன்கு அறிவுறுத்தியிருக்கின்றார். இத்தகைய மெய்ம்மைச் சொற் றொடரால் மற்றைத் தெய்வங்களை வேறெங்கும் அவர் ஓதிற்றிலர்.

அம்பிகாபதி : உண்மை! உண்மை! சிலப்பதிகாரத்தில் இன்னும் பல இடங்களிலும் இளங்கோவடிகள் சிவபிரான் முதன்மை கூறியிருப்பினும், ஈதொன்றே போதும். அது நிற்க, திருத்தொண்டர் புராணத்திற்குஞ் சீவகசிந்தாமணிக்குமுள்ள ஒற்றுமை வேற்றுமைகளையுஞ் சிறிது நுவலுங்கள்!

அமராவதி : சிந்தாமணி, சீவகன் தன் கலையுணர்வின் திறத்தாலும், போர்த்திறத்தாலும், நுண்ணறிவாலும் எட்டு மனைவியரை மணந்த ஒரு வாழ்க்கை வரலாற்றைச் சொல் கின்றதே யன்றிச், செயற்கரிய செய்த பெரியார் வரலாறு களைத் திருத்தொண்டர் புராணம்போற் சொல்கின்றிலது. மேலும், மக்களை மேல் நிலைக்கண் உய்க்குந் தெய்வ அருள் விளக்கமுஞ் சிந்தாமணியிற் காணப்படுகின்றிலது. அது வல்லாமலுஞ் சீவகன் வரலாறு உண்மை என்பதற்குச் சான்று மில்லை பெரியபுராணம் மெய்யடியார் வரலாற்றின் உண்மை

யினை உள்ளபடி யே நுவல்வது; அவ்வரலாறுகளின்

உண்மைக்குச் சான்றுகள் மிகுதியாய் உள்ளன. உண்மையே கூறுந் தமிழ் வழக்கிற்குச் சீவகசிந்தாமணி சிறிது ஒவ்வாது.

அம்பிகாபதி : இரண்டுக்கும் வேற்றுமை சொன்னீர்கள்; ஒற்றுமை ஏதேனும் உண்டா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/96&oldid=1580698" இலிருந்து மீள்விக்கப்பட்டது