உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

62

மறைமலையம் 12

அமராவதி : ஆம், அதற்கு இதனை ஒப்பாக உரைத்தல் பெரும்பாலும் இசையாததேயாம். ஆயினுஞ், சுவாமி! காரைக்காலம்மையார், மங்கையற்கரசியார், திலகவதியார், பரவையார், சங்கிலியார் முதலான தெய்வக் கற்பரசிகளின் வரலாறுகளை ஆசிரியர் சேக்கிழார் நுவலுமாறு போலவே, கண்ணகி, மாதவி என்னுங் கற்பணங்குகளின் வரலாறுகளை ஆசிரியர் இளங்கோவடிகளும் எமது நெஞ்சம் நெக்கு நெக்குருக இயம்பி இருக்கின்றார். அவ்வாற்றால் அவ்விருகாப்பியங்களுந் தம்முள் ஒக்கு மன்றோ?

அம்பிகாபதி : இளவரசியார் அவ்விரண்டுக்குமுள்ள ஒற்றுமையினை எடுத்துக்காட்டிய நுட்பம் பெரிதும் பாராட்டற்பாலது. இனி மெய்ந்நெறி பிறந்தவர்களுங் கற்பிற் சிறந்த காதன் மனைவியர்க்குப் பிழை செய்தொழுகின வர்களும் முன்னர் ஒறுக்கப்படினும் பின்னர் அருள் செய்யப் பட்டமையினை அப்பர், கூன்பாண்டியர், சுந்தரமூர்த்திகள் முதலாயினார் பால் வைத்துச் சேக்கிழார் கூறுமாப்போல் இளங்கோவடிகள் கூறிற்றிலரே!

அமராவதி : அப்பர், கூன்பாண்டியன், சுந்தரமூர்த்தி களெல்லாம் எந்த நிலையிலுஞ் சிவபிரான் றிருவடிக் கட்பதிந்த பேரன்பிற் சிறிதும் பிறழாதவர்கள்; ஆதலால், அவர்கள் தாஞ் செய்த பிழைக்காக முன்னர் ஒறுக்கப் படினும், பின்னர் அருள் செய்யப்பட்டார்கள். மற்றுக் கோவலனும், பாண்டியன் நெடுஞ்செழியனும் அவர்போல் இறைவன்பாற் பதிந்த மெய்யன்பினராதல் காணப்படாமையின், அவர் ஊழ்வினையின் பாலராய்க்கிடந்து ஒறுக்கப் பட்டு மடிந்தனர்! அவர் அருளின் பாலராய் நில்லாமையால், அவரை ஊழ் வினை உருத்து வந்து ஊட்”டியதென டியதென இளங்கோவடிகளும் இயம்பி இருக்கின்றனர்.

66

அம்பிகாபதி : அதுதான் உண்மை! இவ்வேற்றுமை யிலும் அவ்விரண்டு காப்பியங்களும் ஓர் ஒற்றுமையுடையன வாயே திகழ்கின்றன. அது நிற்க, திருத்தொண்டர் புராணத் திற் சிவபிரானுக்கு முதன்மை சொல்லப்பட்டிருத்தல் போலச் சிலப்பதிகாரத்திற் சொல்லப்பட்டுள்ளதோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/95&oldid=1580697" இலிருந்து மீள்விக்கப்பட்டது