உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/94

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

61

காப்பியங்களின் ஒற்றுமை வேற்றுமைகளையும் ஏற்றத் தாழ்வுகளையுஞ் சிறிது எடுத்துக்காட்டுங்கள்!

அமராவதி : இதுமிகப் பெரிய வினா; என் அறி வினளவுக்கு மேற்பட்டது. ஆயினும், ஆசிரியர் வினாவி யதனால் விடை சொல்லக் கடமைப்பட்டிருக்கின்றேன். சிலப்பதிகாரமும் மணிமேகலையும் நம் தமிழ் நாட்டு மேன் மக்கள் சிலரின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை நிகழ்ந்தபடியே மெய்யாக வைத்துச் சுவைபடுத்திக் கூறுகின்றன. இவ்வகை யில் மணிமேகலையைவிடச் சிலப்பதிகாரமே சிறந்ததெனக் கருதுகின்றேன். மேலும், மணிமேகலை ஒரே தன்மையவான அகவற்பாக்களினால் ஆக்கப்பட்டிருக்கின்றது. சிலப்பதி காரமோ ஆங்காங்கு நிகழும் நிகழ்ச்சிகளில் ஈர்ப்புண்டு மக்கள் உள்ளம் எவ்வெவ்வாறு அசைவுறுகின்றதோ, அவ்வவ்வ ஈற்றிற் கிசைந்தபடி யெல்லாம் அகவற்பா, கலிப்பா வஞ்சிப்பா முதலான பலதிறப் பாக்களும் இசை தழுவி யாக்கப்பட்டுத் தான் கூறுங் கதை நிகழ்ச்சிகளை நங் கண்முன்னே காட்டிப் பலவகையுணர் வெழுச்சிகளால் நம்மை யின்புறுத்துந் தகையதாய் விளங்கு கின்றது. உண்மையை உள்ளபடி யெடுத்துச் சொற்சுவை பொருட்சுவை துளும்பத் தொடுத்து சைத்தேன் துளிக்க மிழற்றும் முறையிற் சிலப்பதிகாரமும் திருத்தொண்டர் புராணமும் ஒருங்குவைத் தெண்ணற்பாலன வென்பது சிறியேன் கருத்து.

அம்பிகாபதி : ளவசியாரின் கருத்து மிகவும் பொருத்தமாயிருக்கின்றது. ஆயினுஞ், செயற்கரிய செய்கை களால் தாம் சிவபிரான் திருவடிக்கண் வைத்த பேரன்பிற் சிறிதும் பிறழாமையினைத் தெருட்டிய மெய்யடியார் வரலாறுகள் எல்லா நலனுந் தோய்ந்தொளிரக் கொண்டு. ஆசிரியர் சேக்கிழார் அருளிச் செய்த திருத்தொண்டர் புராணந் துலங்கா நிற்கின்றது; மற்றுச் சிலப்பதிகாரமோ எம்போன்ற மக்களின் வாழ்க்கை வரலாற்றினை நுவலா நிற்கின்றது; இது தமிழ் நலம் ததும்ப இயற்றப்பட்ட தொன்றாயிருப்பினும் இதனை அதற்கு ஒப்பாக உரைத்தல்

கூடுமோ?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/94&oldid=1580696" இலிருந்து மீள்விக்கப்பட்டது