உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/93

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

60

மறைமலையம் 12

உடையர். அவர் செய்திருக்கும் ஏற்பாட்டில் எனது நன்மை யும் உள்ளடங்கி நிற்கும்; அதிற் சிறிதும் ஐயமில்லை.

(அமராவதியுந் தோழியுந் திரைக்கு உட்புறத்தே வந்து)

அமராவதி : (உள்ளிருந்தபடியே) ஆசிரியர் தில்லை வாணர்க்கு எனது புல்லிய வணக்கம்.

அம்பிகாபதி : (திரைக்கு வெளியிலிருந்தபடியே) இளவரசியார் கல்வியிற் சிறந்து பல்லூழி இனிது வாழ்க!

அமராவதி : நயினார் பிள்ளை! நும் தந்தையார் அன்னையார் முதலியோருடன் நலமாயிருக்கின்றீரா?

நயினார் பிள்ளை : அம்மணி! தங்களருளால் : அனை வேமும் நலமுடன் வாழ்கின்றோம்.

ளவரசியார்

இதுகாறும்

அம்பிகாபதி : றுள்ள நூல்கள் இன்னவை யென்றறிய விரும்புகின்றேன்.

பயின்

அமராவதி : இலக்கியத்திற் “பதிணெண்கீழ்க் கணக்கும் "சிலப்பதிகாரம்” “மணிமேகலை” “சீவகசிந்தாமணி” “திருத் தொண்டர் புராண" மும்; இலக்கணத்தில் “தொல்காப்பியம் எழுத்துஞ் சொல்லும்” “இறையனாரகப் பொருள்” “யாப் பருங் கலக்காரிகை”யும் பயின்றிருக்கின்றேன். இனித் “தொல்காப்பியப் பொருளிலக்கணமும்” “புறநானூறுந்” தொடங்கல் வேண்டும்.

அம்பிகாபதி : இளவரசியார் பயின்றுள்ள நூல்களில் தாம் அடைந்திருக்கும் புலமையின் அளவை யான் தெரிந்து கொண்டால்தான் அதற்கேற்ப மற்றைப் பெருநூல்களை யான் கற்பித்தல் கூடும்.

அமராவதி : அங்ஙனமே தாங்கள் தெரிந்து கொள்ள லாம். அந்நூற் பொருள்களைப்பற்றித் தாங்கள் வினாவு கின்றவைகளுக்கு யான் தெரிந்தமட்டில் விடைகூறுகின்றேன்.

அம்பிகாபதி : சிலப்பதிகாரம், மணிமேகலை, சீவக சிந்தாமணி, திருத்தொண்டர் புராணம் என்னும் நான்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/93&oldid=1580695" இலிருந்து மீள்விக்கப்பட்டது