உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/92

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வந்து பாட

6

அம்பிகாபதி அமராவதி

59

சொல்லிப் போகலாம். (திரைக்கு அப்பால் உள்ள தோழியை விளித்து) அம்மா நீலம்! இதோ ஆசிரியர் தில்லைவாணரை நம் அமைச்சரின் மகன் நயினார்பிள்ளை அழைத்து வந்திருக்கிறார். எனக்கு யாது கட்டளை?

தோழி : ஏடி தத்தே! இதோ! இளவரசியாரை அழைத்து வருகின்றேன். நீ போகலாம்.

வாயிலாள் : அப்படியே அம்மா. இளவரசியார் நீடு வாழ்க! திரும்பிப் போகையில் தனக்குள்) ஆ! இவ்வளவு பேரழகு வாய்ந்த இவ்விளைய ஆசிரியர் தில்லைவாணர் எந்த ஊரி லிருந்து வந்தவரோ! மிக்க வனப்புடைய மெழுகுபாவையை யொத்த நம் இளவரசியும் இவரும் ஒருவரை யொருவர் காணநேர்ந்தால் ஒருவர்மேலொருவர் காதல் கொள்ளா திருப்பரோ? ஆதலால் தான் இருவர்க்கும் இடையே திரையிட்டு வைத்திருக்கின்றனர் போலும்! இது நல்லதோர் ஏற்பாடே!

அம்பிகாபதி : (தன் நண்பனைப் பார்த்து மெல்லிய குரலில்) அருமை நண்ப! எனக்குரிய பெயரால் என்னைக் குறிப்பிடாமல், தில்லைவாணர் என்னும் பெயரால் நீயும் இங்குள்ளவர்களும் என்னைக் குறிப்பிடுதல் ஏன்?

66

நயினார் பிள்ளை : அதைப்பற்றி என் தந்தையாரை முன்னமே கேட்டேன். அவர் அதன் காரணத்தைச் சொல்ல மறுத்தனர். ஈதெல்லாம் ஏதோ ஒரு சூழ்ச்சியாக இருக்கின்றது. அகலா தணுகாது தீங்காய்வார் போல்க, இகல் வேந்தர்ச் சேர்ந் தொழுகுவார்” என்று தெய்வத் திருவள்ளுவர் கற்பித்தபடி நாம் இங்கே முறை தவறாது நடந்து கொள்ளுதலைக் கருதியே உனக்கு இப்புனைவுப் பெயர் வைக்கப்பட்டிருக்கின்றதென எண்ணுகின்றேன். என் தந்தையார் உனது நன்மையின் பொருட்டாகவே இங்ஙனஞ் செய்திருக்கின்றாரென்ப தென் நம்பிக்கை ஆகையால், அவர் கட்டளை தந்துள்ளபடி நீ நடக்குமாறு உன்னை மிகவும் வேண்டிக்கொள்கின்றேன்.

அம்பிகாபதி : ஓ நண்பா! நீ அங்ஙனம் என்னை வேண்டல் எற்றுக்கு? கரும்பு தின்னக் கூலியா? நின் தந்தையார் கூர்த்த அறிவும் எல்லார்க்கும் நன்மையே செய்யும் ஈர நெஞ்சமும்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/92&oldid=1580694" இலிருந்து மீள்விக்கப்பட்டது