உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

58

அம்பிகாபதி:

❖ LDM MLDMOED -12 →

என் ஆருயிர்த் துணைவ! நீ இத்துணை யன்புடன் எனக்கு நல்லுரை பகர்ந்ததற்கு மிகமகிழ்கின்றேன். நீ கற்பித்தபடியே யான் அரண்மனையில் முறை வழுவாது நடந்து அமராவதிக்குத் தமிழ்நூல் கற்பித்து வருவேன்.பார்! பகலவன் மேல்பால் விரைந்திறங்குகின்றான்.

நாம்

மனைக்குச் செல்வோம் வா. (இருவருஞ் செல்கின்றனர்)

(சென்று அரண்மனை வாயில் காவலனை நோக்கி)

அரண்

நயினார் பிள்ளை : கடம்பா! இளவரசியார்க்குப் பாடஞ் சொல்ல இதோ ஆசிரியர் தில்லைவாணரை அழைத்து வந்திருக்கின்றேன். இவர் நாடோறும் மாலைப் பொழுதில் இந்நேரத்திற்கு பாடஞ் சொல்ல வருவர். இவரை இளவரசி யின் கன்னிமாடப் பூங்கா மண்டபத்திற்குத் தடை செய் யாமற் போகவிடு.

வாயிலான் : நல்லது சுவாமி! நம்மன்னர் பெருமானும் முன்னமே எனக்கு இதே கட்ட இதே கட்டளை தந்திருக்கின்றார். அம்மண்டபத்திற்கு இவ்வழியே வாருங்கள் சுவாமிகாள்! இருவரும் அவனைப் பின்றோடர்ந்து சென்று கன்னி மாட சேர்கின்றனர்) யார் அம்மா அங்கே? தத்தையா?

6 ஞ்

வாயிலாள் : ஆம் ஐயா கடம்பரே. நம் இளவரசி யார்க்குப் பாடஞ் சொல்ல ஆசிரியர் தில்லைவாணர் வந் தி ரு க்கின்றனரோ? அம்மையுந் தோழியும் அவரை எதிர் பார்த்துக் கொண்டுதான் இருக்கின்றனர். யான் இவர்களைப் பூங்கா மண்டபத்திற்கு அழைத்துக் கொண்டு போகின்றேன். நீர் போகலாம். (வாயிலான் போய் விடுகிறான்) சுவாமிகாள்! இவ்வழியே வாருங்கள்! (அழைத்துப்போய் அம்மண்ட பத்தில் விட்டு) இவ்விருக்கையில் அமருங்கள்! (நயினார் பிள்ளையைப் பார்த்து) இதோ இடப்பட்டிருக்கும் த் திரையின் இப்பக்கத்தேயிருந்துதான் ஆசிரியர் பாடங் கற்பித்தல் வேண்டும். இளவரசியாருந் தோழியும் இதன் அப்பக்கத்தே யிருந்துதான் பாடங் கேட்பர். நாளை முதல் ஆசிரியர் என் உதவியை வேண்டாமலே இங்கு இந்நேரத்தில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/91&oldid=1580693" இலிருந்து மீள்விக்கப்பட்டது