உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

57

நயினார் பிள்ளை : அவள் நம் அரசர்க்கு ஒரே செல்லப் புதல்வியாய் இருத்தலால், அவளைப் பற்றிக் குறைவு சொன் னால் அஃதொரு பெருங்குற்றமாகக் கருதப்படுமன்றோ? அதனால்தான் நின் தந்தையார் அவளிடத்துள்ள உடற் பழுதினைக் கூறினாரில்லையென எண்ணுகின்றேன். அரசர் குலசேகரனை வருவித்தும் அவன் அவளை மணந்து கொள்ளுமாறு இணங்குதற் பொருட்டே போலும்!

அம்பிகாபதி : இருக்கலாம். இம்மாலைப் பொழுதி லிருந்து யான் இளவரசி அமராவதிக்குக் கல்வி கற்பித்து வரும்படி நம் சோழமன்னர் கட்டளையிட்டிருக்கின்றாரென நின் தந்தையார் எனக்குச் சொல்லினர்.

நயினார் பிள்ளை : அதனை மீண்டும் உனக்குத் தெரி வித்து, இன்னுஞ் சிறிது நேரத்தில் உன்னை அரண்மனைக்கு அழைத்துச் சென்று, அங்கே கன்னிமாடத்தின் பின்னேயுள்ள ளமரக்காவின் எழில்கெழு மண்டபத்தில் இளவரசிக்குப் பாடஞ் சொல்லுமிடத்தில் நின்னை விட்டு வரும்படி என் தந்தையார் என்னை ஏவியிருக்கின்றனர். அதனோடு இளவரசி நின்னைப் பார்க்கவும் நீ அவளைப் பார்க்கவும் கூடாதபடி நும்மிருவர்க்கும் இடையே திரையிடப்பட்டிருக்குமாம். அங்ஙனம் திரையிட்டது உடற்பழுதுற்ற இளவரசியை வெளியார் எவரும் பார்க்கலாகாது என்பதற்கே. அதுபோக, நீ தொட்டதற்கெல்லாம் பாட்டும் பாடும் இயற்கையினனாத லால், அரண்மனை இளமரக்கா அதன் மண்டபம் முதலியவை களின் அழகுகளைக் கண்டவுடனே பாட்டுப்பாடி விடாதே. அவட்குப் பாடஞ் சொல்லி வீட்டுக்குத் திரும்பும் வரையில் நீ கண்ணில்லாத ஒரு குருடனைப் போலவே நடந்து கொள்ளல் வேண்டுமென்று என் தந்தையார் வற்புறுத்திச் சொன்னார். சிறிது பிசகு

கண்டாலும் நம் அரசர் பெருஞ்சீற்றங் கொள்ளுமியல்பினராதலால் மிகவும் கருத்தாக நீ நடந்து காள்ளல்வேண்டும். அறிவிற் சிறந்த உனக்கு யான் வேறு மிகுதியாய்ச் சொல்ல வேண்டுவது என் உளது? நீ மேற்கொண்ட செயலை இறைவன் இனிது நிறை வேற்றுவானாக!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/90&oldid=1580692" இலிருந்து மீள்விக்கப்பட்டது