உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/89

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

56

மூன்றாம் நிகழ்ச்சி : இரண்டாங் காட்சி

களம் : கம்பரது மாளிகை.

அம்பிகாபதி : வருக, வருக என் நண்ப நயினார் பிள்ளை! நின்னைச் சில நாட்களாய் யான் காணவில்லையே!

நயினார் பிள்ளை : அம்பிகாபதி! நின்னைக்காணாத நாட்கள் பயனில் நாட்களே! நம் மன்னர்பிரான் கட்டளைப் படி என் தந்தையாரால் ஏவப்பெற்றுச் சடைய வர்மன் குலசேகர ய பாண்டியனை இங்கு அழைத்துவரும் பொருட்டு மதுரைமா நகர் சென்று நேற்றுத்தான் அவனை அழைத்துக்கொண்டு இங்குவந்து சேர்ந்தேன்.

அம்பகாபதி : எதற்காக நம்மரசர் அப்பாண்டிய இளவர சனை அத்தனை கின்றனர்?.

விரைவாக இங்கு அழைப்பித்திருக்

நாயினார் பிள்ளை : நம்மரசரின் மகள் அமராவதிக்குத் திருமணஞ்செய்ய எற்படாகின்றது. குலசேகரன் அமராவதிக்கு மாமனாதலால் இருவரும் பழகும் பொருட்டு அவன் வருவிக்கப்பட்டிருக்கலாம்.

அம்பிகாபதி: அவன் அங்ஙனம் விரைந்து வருகைக்கு அதுதான் காரணமாக இருத்தல் வேண்டும். அஃதிருக்கட்டும். இளவரசி அமராவதி கூர்ந்த அறிவும் முத்தமிழ்ப் பயிற்சியும் உடையவளாயினுங், கைகால் முடமாயிருப்பவளென்றும், அழகற்ற முகத்தின ளென்றும் நின் தந்தையார் சொல்லக் கேட்டேன். ஆனால், என் தந்தையாரோ நீண்ட காலமாய் அவட்குப் பாடஞ் சொல்லி வருபவராயிருந்தும் அவ ளுடைய ய யாக்கையின் குற்றத்தையும் முக அழகு இன்மை யினையும் எனக்குச் சொன்னதேயில்லை!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/89&oldid=1580691" இலிருந்து மீள்விக்கப்பட்டது