உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

:

அம்பிகாபதி அமராவதி *

55

இரா

அமராவதி : அஃதுண்மைதான். அவர் இளமையிலேயே கற்றுத் தேர்ச்சி பெற்றிருந்தாற் பின்னர்க்கண் குருடாய்ப் போனாலும் பாடஞ்சொல்வதிற் சால்வதிற் சிறிதுங்கு தென்றே நம்புகின்றேன். அவர் குருடராய் இருத்தலால் நமது மேல் மாளிகைக்கு வருவது அவர்க்கு இடர்ப் பாடாயிருக்கும். ஆதலால், இக்கன்னி மாடத்தின் பின்னுள்ள பூந்தோட்ட மண்டபத்தில் இருந்தே நாம் பாடம் கேட்டற்கு வேண்டும் ஒழுங்குகளை என் அன்னையார் தெரிவித்தபடியே போய்ச் செய். மாலைக்காலம் நெருங்குகின்றது. ஆசிரியர் தில்லை வாணர் விரைவில் வந்துவிடுவர். அவர் நங்கண்ணிற்படாமல் வரவும், வந்திருந்து பாடஞ் சொல்லவும், பின் திரும்பிச் செல்லவும் நம் அமைச்சரின் மகன் நயினார் பிள்ளையும் வேண்டிய ஏற்பாடுகளைச் செய்வாரெனக் கருதுகின்றேன். (தோழி போய் விடுகின்றாள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/88&oldid=1580690" இலிருந்து மீள்விக்கப்பட்டது