உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/87

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

54

மூன்றாம் நிகழ்ச்சி : முதற் காட்சி

களம் : அமராவதி இருக்குங் கன்னிமாடம்.

தோழி: அம்மா அமராவதி! நம் ஆசிரியர் கம்பர் நேற்று தான் வெளியூர்க்குப் போய் இருக்கிறார். அவர் திரும்பிவர ஓராண்டு செல்லுமாம்; அதுவரையில் நமக்குக் கல்வி கற்பிக்கத் தில்லைவாணர் என்னும் ஒரு சிறந்த தமிழாசிரியர் ஏற்படுத்தப் பட்டிருக்கிறார். அவர் கட்பார்வையிழந்த குருடராதலால், அவரை நாம் யாரும் பார்க்கலாகாதாம். அவர்க்கும் நமக்கும் இடையே சாயம்பூசிய தடிப்பான ஓர் இரட்டுத் திரைகட்டி, அத்திரையின் வெளிப்புறத்தில் அவர் இருந்து பாடஞ் சால்ல, நாம் அதன் உம்புறத்திலிருந்து பாடங்கேட்டல் வேண்டுமாம். இதனை நின் அன்னையாரான அர அரசியார் உனக்குத் தெரிவிக்கச் சொன்னார்கள். நம் அமைச்சரின் மகன் நயினார் பிள்ளை தான் ஆசிரியருடன் வருவார்.

அமராவதி : ஏடி நீலம்! ஈதென்னடி ஒருபெரு வியப்பா யிருக்கின்றதே! கண்ணில்லாக் குருடர் ஒருவர் எங்ஙனங் கல்வி கற்றார்? அவர் எங்ஙனம் நமக்குப் பாடஞ் சொல்வார்? என வியப்புறுகின்றேன்.

தோழி : அப்படியன்று அம்மா! அவர்க்குக் கண் குருடாய்ப் போனது சில ஆண்டுகளுக்கு முன்னே தானாம். அவர் தமக்கு இருபதாமாண்டு நிரம்பு முன்னமே தமிழ் இலக்கண இலக்கிய நூல்களுங் கலைநூல்களும் ஆழ்ந்து ஆராய்ந்து கற்றுத் தேர்ந்த நுண்ணறிவினராய் விட்டனராம். ருபதாமாண்டு கடந்த பிறகுதான் அம்மை நோய் கண்டு அவர்க்குக் கண் குருடாயிற்றாம். ப்போதவர்க்கு இருபத்தைந்தாமாண்டு நடக்கிறதாம்; அவர் எப்படி இருந்தால் நமக்கென்ன? நமக்குக் கல்விதானே வேண்டும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/87&oldid=1580689" இலிருந்து மீள்விக்கப்பட்டது