உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/86

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

53

அமைச்சர் : மன்னர் பெரும! இருவரும் தக்கோ ரென்பதில் தட்டில்லை. என்றாலும், அரசியார் சொல்லு வதுங் கருதற்பாலது. ஆதலால், யான் ஒரு சூழ்ச்சி சொல்லு கின்றேன். அது பிராட்டிக்குந் தமக்கும் எனக்குமல்லது பிறரெவர்க்குந் தெரிதலாகாது.

(அரசன் கோமாளியைச் சிறிது நேரம் வெளியே போயிருக்கக் கடடளையிட்டபின் அமைச்சர் தமது சூழ்ச்சியைப் பிறரெவர் செவிக்குங் கேளாதபடி அரசர்க்கும் அரசிக்கும் மெல்லச் சொல்ல, இருவரும் அவ்வாறே செய்விக்க இசைந்தபின், அமைச்சர் போக எழுகின்றனர்)

அரசன் : நம்பிப்பிள்ளை! இன்னும் ஒரு இன்னும் ஒரு சொல். நம் புதல்வியின் திருமணத்திற்கு வேண்டும் ஏற்பாடுகள் செய்து கொண்டிருக்கிறோம். நம் மருகன் சடையவர்மன் குலசேகர பாண்டியனுக்குத் திருமுகம் நாளையே விடுத்து, அவனை மதுரையினின்றும் இங்கு வருவியுங்கள்.

அமைச்சர் : அங்ஙனமே செய்கின்றேன் பெருமானே. (வணங்கிப் போய் விடுகிறார்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/86&oldid=1580688" இலிருந்து மீள்விக்கப்பட்டது