உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

52

மறைமலையம் 12

அரசன் : சாக்கியப் புலவர் எல்லாம் பொய் என்று சொன்னவுடனே இவன் என்னை விளித்து, அப்படியானால் 'நான் இதோ இருக்கிறேனே! என்னைக்கூடப் பொய்யென்று சொன் னால் எனக்கு அழுகை வருது' என்று சொல்லி அழத் தாடங்கி விட்டான். அவையின ரெல்லாரும் வயிறு குலுங்கக் குலுங்க நகைத்தனர். அதன் பின் என்னைச் சுட்டிக்காட்டி‘அரசே! நீங்கள் கூடப் பொய்யா?' என்று அவன் வினவ, அவையின ரனைவருஞ் சாக்கியப் புலவரை நோக்கியபடியாய் அடங்கி விட்டனர். மேலும் அவன் 'இந்த உலகமெல்லாம் பொய் யென்றாரே; அப்படியானால் இந்த

.

பு

இரவில் எனக் கு உணவு; அதுவும் பொய்யாகாமற்

டுடன்

பார்த்துக்கொள்ளுங்கள் என்று கோணற் கும்பிட்டுட கொச்சையாய்ப் பேசவே, பின்னும் எல்லாரும் பெரிதும் சிரித்தனர்! சாக்கியப் புலவர் முகங் கருகிப் போயிற்று. அது கண்டு யான் ‘அவர் தமது மதக் கொள்கையைச் சொன்னாரே தவிர, எல்லாம் உடனே பொய்யாய் விடுமென்பது அவரது கருத்தன்று' எனக் கூறி எல்லாரையும் அமைதிப் படுத்தினேன்.

உட்கொள்ளும்

அரசி : துத்தி சொல்லிய சொற்களால் சாக்கியப் புலவர் தமது கொள்கையின்படி தாமும் பொய்யாகல் வேண்டும். அவர் உணவும் பிற நுகர் பொருள்களும் பொய்யாகவே ஒழியவேண்டும் என்பது எளிது போதரலால் அவர் முகங்கருகாமல் வேறேன்செய்வார்! ஏடா துத்தி! உனக்கு இன்றிரவு இரட்டைச்சாப்பாடு.

கோமாளி : அம்மா, அம்மா. மாராசா எனக்கு மூணு சாப்பாடல்லோ ரொம்ப ரொம்பத் தாரேனெண்ணு சொன்னாங்க, நீங்க ஒரு சாப்பாட்டெ குறைச்சிட்டிங்களே!

அரசி : (நகைத்து) அப்படியானால், நான் உனக்கு நான்கு சாப்பாடு தருகிறேன்.

அரசன் : கம்பர் திரும்பிவரும் வரையில் அம்பிகாபதி தான் நம் புதல்விக்குப் பாடம் சொல்லல்வேண்டும். அவன் நமது நிலையுந் தனது நிலையும் நன்குணர்ந்த தக்கோ னாதலால், ஏதுந் தவறிழைப்பான் அல்லன். என் மகளுந் தனது மேதகு நிலையுணர்ந்த மிக்கோளாதலால் சிறிதும் பிழைபடாள்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/85&oldid=1580687" இலிருந்து மீள்விக்கப்பட்டது