உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/84

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

51

கிறீர்கள். இத்தகைய ஒருவனை, மடந்தைப் பருவத்தினளும் பேரழகியும் முத்தமிழ்ப் பயிற்சியில் மிக்க விழைவினளுந் திருமண மாகாதவளுமான என் மகளுக்கு ஆசிரியனாக அமர்த்துதல் நன்றாகுமா என நினையாமற் பேசுகிறீர்களே! நுங்கள் சொல்லைக்கேட்டு என் நெஞ்சம் நடுங்குகின்றது! மேலும் ஆசிரியர் கம்பர்தாம் நம்மருமைப் புதல்விக்குத் தமிழ் கற்பித்து வருகையில் அவர் மகனை எதுக்காக அவளுக்கு ஆசிரியனாக அமர்த்தக் கருதுகிறீர்கள்?

அரசன் : அதன் காரணத்தை யான் உனக்கு தெரிவிக்கு முன் வேறுபேச்சு வந்து குறுக்கிட்டது. கம்பர் தமது இராமா யணத்தை நமது புலவர் பேரவையில் அரங்கேற்றுதற்கு நம் புலவர் எவரும் இடங்கொடுக்கவேயில்லை. அது கண்டு நம் அமைச்சர் அதனை அவர் தில்லை வாழந்தணரிடையிலாவது திருவரங்கத் திருமாலடி யாரிடையிலாவது கொண்டு போய் அரங்கேற்றுக வென்று சொல்லிவிட்டார். (அமைச்சரைப் பார்க்க)

அமைச்சர் : ஆம், அன்னையே ! கம்பர் தம் நூலின் கடவுள் வணக்கச் செய்யுட்களைப் படித்தவுடனேயே நம் புலவர்கள் ஒருவர் பின்னொருவராய் அவற்றின்கட் பிழை கண்டு வினவவும் அவற்றிற்கு அம்பிகாபதியார் விடை சொல்லவும் ஆக ஒரு பெருஞ் சொற்போர் நிகழ்ந்தது! கடைசியாகச் சாக்கியப் புலவர் கூறிய எல்லாம் பொய்யென்னுங் கொள்கையினால் ஒரு பெருங் குழப்படும் உண்டாயிற்று.

அரசன் : பார்த்தீரா நம்பிப் பிள்ளை! கடவுளும் பொய், உயிரும் பொய், உலகமும் பொய், எல்லாம் பொய் என்று நம் சாக்கியப் புலவர் கூறியது து எத்தனை ப் படுபொய்யா யிருக்கின்றது! இதுவும் ஒரு கொள்கையா? இதுவும் ஒரு மதமா? இதற்கு அம்பிகாபதி சொல்லிய விடையைப் பார்க் கிலும், நமது துத்தி அதற்குக் கொடுத்த சாட்டையடியே திறமான விடை! (துத்தி அது கேட்டு விலாப் புடையை அடித்துக்கொண்டு குதிக்கிறான்)

அரசி : (நகைத்துக்கொண்டே) துத்தி அதற்கு யாது சொன்னான் அரசே?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/84&oldid=1580686" இலிருந்து மீள்விக்கப்பட்டது