உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50

❖ LDM MLDMOED -12

கழறினர்; சாக்கியப் புலவர் தமது மிகப்பழைய ‘தசரதஜாதகச்’ சான்று கொண்டு இராமாயணப் பின் நிகழ்ச்சி முழுப் பொய்யென்று காட்டியதை அம்பிகாபதியாரும் ஒரு வகையில் உடன்பட்டே மொழிந்தனர். இந்தவாற்றாற் பண்டைக் காலத்தில் முருகவேள் சூரன் மேற்சென்று அவனை வென்ற நிகழ்ச்சியினையே, வைணவர்கள் இராமன் இராவணனை வென்ற நிகழ்ச்சியாகப் பிற்காலத்தே மாற்றி இராமாயணம் எழுதி வைத்தார்களென்று கருதுகிறேன்.

அரசன் : அதுதான் உண்மை. இனி, நம் அம்பிகாபதியின் நுண்ணுணர்வையும் பரந்தாழ்ந்த கல்வியறிவையும் அழகை யும் இனிய குணங்களையும் நினைக்க நினைக்க அவனைப் பிள்ளையாகப் பெற்ற கம்பர் என்ன தவஞ்செய்தனரோ வென்றெண்ணி வியக்கின்றேன்! இத்தகையான் ஒருவன் நம் அரச குடும்பத்திற் பிறந்திலனே என்றெண்ணியும் வருந்து கின்றேன்!

அரசி : அத்துணைச் சிறந்த அம்பிகாபதியை நம் அரச குடும்பத்தில் ஒருவனாகவே வைத்துப் பாராட்டுதல் நமக்குப் பெருமையே யன்றிச் சிறுமையாகாதே?

அரசன் : அஃதெங்ஙனம் அங்கயற்கண்ணி? அவனோ உவச்ச குலத்திற் பிறந்தவன்; நாமோ உயர்ந்த வேளாள குலத்தினேம். நம்மினும் எத்தனையோ மடங்கு தாழ்ந்த குலத்தவனான அவனை நம் குலத்தவருள் ஒருவனாக வைத்து நலம் பாராட்டுதல் ஒரு சிறிதும் ஆகாது. ஆயினும், அவனை, அவன் தந்தையரைப் போலவே நம்புலவர் பேரவையில் ஒரு பெரும் புலவனாக வைத்துப் பல சிறப்புகளுஞ் செய்யக் கருதியிருக்கின்றேன். அதனோடு, இன்னும் இரண்டு மூன்று நாட்களில் நம் அருமைப் புதல்வி அமராவதிக்கு அம்பிகா பதியை ஆசிரியனாகவும் அமர்த்த முடிவு செய்திருக்கின்றேன். அவளது கூர்ந்த அறிவுக்கு இசையத் தமிழ் கற்பிக்கவல்லவன் அவனே.

அரசி : ஈதென்ன பெருமானே! அம்பிகாபதி கல்வியும் நுண்ணறிவும் வாய்ந்தவனாதலோடு பேரழகும் இளமையும் இனிய குணங்களும் உடையனென்றும் நீங்களே சொல்லு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/83&oldid=1580685" இலிருந்து மீள்விக்கப்பட்டது