உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/82

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

49

ஆண்பிள்ளை மேல் விருப்பம், எனக்குப் பெண் பிள்ளை மேல் விருப்பம்' ஆகையாற், சுவாமிகளே எனக்கு ஒரு பெண் பிள்ளை பிறக்க வரங் கொடுங்கள்' என்று கேட்டு எல்லாரை யுஞ் சிரிக்க வைத்தனன்.

அரசி : நகையாடக் கூறிய துத்தியின் சொற்களும் நுட்பம் உடையனவாகவே காணப்படுகின்றன! பிள்ளைப் பேறு வழங்கல் கடவுள் ஒருவரால் மட்டுமே இயலுமன்றி மக்களால் இயலாது; ஆகவே, மக்களாகிய புலவரைக் கடவுளர் என்றல் பொருந்தாமை, அவன் கூறிய சொற்களிற் குறிப்பாய்க் காட்டப்படுகின்றது. (கோமாளியை நோக்கி) நின் சொல்லின் நுட்பத்தை வியந்தேன். (கோமாளி மகிழ்ச்சி மிக்குக் கோணற் கும்பிடு போடுகிறான்) அதன்பின் யாது நிகழ்ந்ததோ?

அரசன் : அதன்மேற் கோமாளியை பேசவிடாமல் அடக்கினேன். புலவர்கள் கேட்ட கேள்விகளுக்கு விடை தருமாறு நங் கூத்தமுதலியார் வேண்ட, கம்பர் வாளா விருந்தனர். ஆனால், அம்பிகாபதியோ ஒவ்வொரு கேள்விகட்கும் அனைவரும் வியக்கத்தக்க விடைகளை நுண்ணறிவோடும் நூற்சான்று களோடும் நன்கு பகர்ந்தே வந்தான். என்ன நம்பிப்பிள்ளே! நுங்கள் கருத்தையுஞ் சொல்லுங்கள்.

அமைச்சர் : அம்பிகாபதியார் கூறிய விடைகள் நுண் பொருள் பொதிந்து பழைய வைணவத்திற்குஞ் சைவசமய வுண்மைக்கும் முற்றும் ஒத்திருந்தன. அவர் கூறிய விடை விளக்கத்தில் வைத்து நோக்கினால், கம்பர் கூறிய கடவுள் வாழ்த்திற்குக் குற்றம் வராதென்று கருதினேன். ஆனாற் சைவத்திற்குப் பகையாய்ப் பிற்காலத்து வைணவர்கள் கட்டிய புராணக் கதைகளையே விடாப்பிடியாய்ப் பிடித்திருக்கும் நம் வைணவப்புலவர், அம்பிகாபதியாரின் விடைகளைச் சிறிதுமே ஏற்றுக் கொள்ளவில்லை. திருமாலின் பிறப்பாக இராமன், திருமாலினும் நான்முகன் சிவபிரானிலுஞ் சிறந்தவன் என்றே முழங்கினர். அது கண்டு நங்கவிச்சக்ரவர்த்தி கூத்தர் எவ்வளவு சீற்றங்கொண்டு அதனை மறுத்தனர்! சமண் சாக்கியப் புலவர்கள் கடவுள் உண்மையினை ஒப்புக் கொள்ளாவிடினும், இராமாயணக் கதை பொய்யென்றே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/82&oldid=1580684" இலிருந்து மீள்விக்கப்பட்டது