உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

48

மறைமலையம் 12

அரசன் : சிறு தெய்வ வணக்கத்தி;ல ஈடுபட்டவர்க்கு அறிவுக்கண் குருடாவிடு மென்பதற்குக் கம்பரே ஒரு சான்று இராமநுசர் பரப்பிய குரு தெய்வக்கொள்கையில் மயங்கிச், சைவவேளாளச் செல்வராகிய திருவெண்ணெய் நல்லூர்ச் சடையப்பவள்ளலே ‘சடையன்' எனத் தாம் பூண்ட சிவபிரான் பெயரையுமாற்றிச் ‘சரராமன்' என்னும் வைணவப் பெயரைத் தமக்குப் புனைந்து கொண்டார்.அவரது உதவியையே மிக நாடி நிற்குங் கம்பரும் அவரையொப்ப வைணவ மதவெறி பிடித்து, அவரது ஏவுதலால் அவரது ஊரிலிருந்தே வ் விராமாயணத்தை இங்ஙனம் முன்பின் முரணாகப் பாடி முடித்திருக்கின்றார்.

அரசி : பெரும! பின்னர்க் கடவுள் வாழ்த்தைப் பற்றிய முடிவு என்னவாயிற்று?

அரசன் : அந்நேரத்தில் நங் கோமாளி துத்தி கேட்ட ஒரு கேள்வி, கம்பர் கூறிய விடை பொருந்தாமையினை நன்கு விளக்கியதோடு அவரையும் வெள்கச் செய்தது. புலவர் எல்லார்க்கும் அஞ்சிக் கம்பர் பொதுக்கடவுள் வணக்கங் கூறினாராயின், அதைப் புலவர் வணக்கம் என்னாமற் கடவுள் வணக்கம் என்று ஏன் சொல்லல் வேண்டும் என்று துத்தி வினவினான்.

அரசி : ஆ! ஆ! குறியான கேள்விதான். அதற்கு யாது

விடை?

அரசன் : கம்பர் ஏதுமே சொல்லிற்றிலர். ஆனால், அவர் மகன் அம்பகாபதி எழுந்து ‘புலவர்' என்னுஞ் சொல்லுக்குக் கடவுளர் என்னும் பொருளுமுண்டு; அதனாற் கடவுள் வணக்கஞ் சொல்லவே புலவர் வணக்கமும் அதன்கண் அடங்கும் என்றான், அவ்விடையின் நுட்பத்திற்காக அம்பிகாபதியை எல்லாரும் வியந்தனர்.

அரசி : ஓ! கம்பர் மகன் அவ்வளவு நுண்ணிய கல்வியறிவு வாய்ந்தவனா! அவனுக்குத் துத்தி யாது சொன்னான்?

அரசன் : துத்தி அவனை நோக்கி ஏதும் கூறிற்றிலன். ஆயினும், புலவரெல்லாரையும் பார்த்து ‘என் மனைவிக்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/81&oldid=1580683" இலிருந்து மீள்விக்கப்பட்டது