உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/80

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

47

பேரவையில் மிகவுங் கிளர்ச்சியான தொரு சொற் போர் நடைபெற்றது; அஃதிப்போதுதான் ஒரு முடிவுக்கு வந்தது.

அரசி : ஆசிரியர் கம்பர் இயற்றிய இராமாயணத்தைப் பற்றியதாகத்தான் அச்சோற் போர் நிகழ்ந்திருக்க வேண்டு

மென நினைக்கின்றேன்.

அரசன் : நம் கவிச்சக்கரவர்த்தி ஒட்டக்கூத்தர் செய்த சூழ்ச்சி எளிதிலே நிறைவேறுதற்குக் கம்பரது நூலே மிகவும் இடர்தந்து விட்டது . கம்பர் முன்னோடு பின் முரணாக அத்துணைப் பிழைபடக் கடவுள் வணக்கம் பாடுவாரென்று யான் நினைக்கவேயில்லை. சிவபிரான் மேலாதல் திருமால் மேலாதல் அவர் கடவுள் வாழ்த்துச் சொல்லாமல் முத்தொழில் புரியும் முழுமுதற் கடவுளை நேரே கண்டவர் போற் றலைவர் என்னுஞ் சொல்லால் அவ்வாழ்த்தை முதலிற் கூறினார்.

அரசி : முத்தொழில் புரியுங் கடவுளை : வணங்கத் தொடங்கினவர் அவற்கோர் உருவும் பெயரும் ஏற்பித்தன்றி அதனை வாழ்த்தி வணங்கல் இயலாதே.

அரசன் : நீ சொல்லும் இத்தடையினையே நம் சைவப் புலவர் நன்கெடுத்துக்காட்டி மறுத்தார். அதற்குக் கம்பர் பொருத்தமான விடை சொல்லல் இயலாமல் 'இப்புலவர் பேரவை பல் சமயப் புலவருங் குழுமிய தொன்றாயிருத்தலின் அவ்வெல்லார்க்கும் பொதுப்படவைத்து முழுமுதற் கடவுள் வணக்கஞ் சொன்னேன் என்றார். உடனே நம் வைணவப் புலவர் எழுந்து முதற்பாட்டிற் பொதுக் கடவுள் வணக்கஞ் சொல்லிப் பின்னிரண்டு பாட்டுகளில் திருமாலே முதற் கடவுள் என்றது முன்னோடுபின் முரணாமன்றோ என மறுத்தனர்.

அரசி : ஆம், அஃதுண்மைதானே அரசே! முத்தொழிலைப் புரியுங் கடவுளினும் மேலாகக் காத்தற்றொழில் ஒன்றே புரியுந் திருமாலை முதல்வராக வைத்தல் யாங்ஙனம் பொருந்தும்? இதுதானும் உணராமற் கம்பர் முன்னொடு பின் முரணாகக் கடவுள் வாழ்த்துப் பாடியது எனக்குப் பெரியதொரு வியப்பைத் தருகின்றது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/80&oldid=1580682" இலிருந்து மீள்விக்கப்பட்டது