உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/79

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

இரண்டாம் நிகழ்ச்சி : இரண்டாங் காட்சி

களம் : அரண்மனை, உவளகம்.

நேரம் : மாலை

அரசன் : (அமைச்சருடன் உவளகத்திற்குச் செல்கையிற் கோமாளியைப் பார்த்து) ஏடா, துத்தி! அமைச்சரும் யானும் வருகின்றோம் என்று அரசிக்கு முன் ஓடிச்தெரிவி. (அமைச்சரைப் பார்த்து) நெடுநேரமாகியும், இன்னஞ் சிறிது நேரம் ம்மாலையில் நீங்கள் எம்முடன் இருக்க வேண்டு வது பற்றி வருந்துகின்றேன்.

காத்திருக்கக்

மன்னர்

கடமைப்பட்டிருக்

அமைச்சர் : எவ்வளவு நேரமானாலும் பருமான் பணியிற் கின்றேன்.

அரசன் : ஆசிரியர் கம்பர் தில்லை திருவரங்கம் போய்த் தமது நூலை அரங்கேற்றி மீள ஏறக்குறைய ஓர் ஆண்டு செல்லுமென எண்ணுகின்றேன். அதுவரையில் எம்மருமைப் புதல்வி அமராவதிக்குத் தமிழ்ப்பாடங் கற்பிக்க எவரை ஏற்படுத்தலாம் எனக் கருதுகிறீர்கள்?

(இருவரும் உவளகத்தினுட் சென்று அரசன் அமர, அமைச்சர் பக்கத்தே நிற்க, அரசி வந்து அரசனைப் பணிந்து)

அரசி : பெருமான் புலவர் பேரவையினின்றும் வர நெடுநேரமாயிற்றுப் போலும் (அமைச்சரைப் பார்த்து) நம்

பிள்ளை நிற்கின்றனரே.

அரசன் : பிள்ளே! இருக்கையில் அமருங்கள்! அங்கயற் கண்ணி! நீயும் அத்தளிமத்தில் அமர். இன்றைக்கு நம்புலவர்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/79&oldid=1580681" இலிருந்து மீள்விக்கப்பட்டது