உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/122

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

89

போய்விட்டான். பின்னர் என் தந்தையார் என்னைப் பார்த்தபோது யான் அவனை மணக்க மறுத்தமைக்காக வருந்திப் பேசினார்; அதன் பின் மீண்டும் என்னை நேற்றுக் கோயிலில் ஆடிப்பாடிச் செய்தபோது, வேறோர் இளைஞரை அங்கு வரச் செய்திருந்தார். இதில் ஏதோ ஒரு சூழ்ச்சி யிருக்கிறதென்பது உனக்குத் தோன்றவில்லையா?

ம்

தோழி : ஆம் அம்மா! முன்பின் நிகழ்ச்சிகளை அறிந்தால் தானே உண்மை இன்னதென்று விளங்கும். வேறென்ன சூழ்ச்சி? நீ நின்மாமனை மணக்க விரும்பாமையால் நேற்றோர் இளைஞரை நின் தந்தையார் வருவித்தது, அவரை யாவது நீ மணக்க விரும்புவையா என்று பார்க்கத்தான்.

அமராவதி : நீலம், நேற்றுவந்த இளைஞரை யான் மணக்க விரும்பினாலும், அவ்விளைஞர் என்னை மணக்க விரும்பு வாரோ என்பது தெரிதல் வேண்டுமே!

தோழி: அமராவதி! நீயே நின் பேரழகின் சிறப்பினைச் சிறிதும் அறியாமற் பேசுகின்றாய். நின் ஒப்புயர்வில்லாப் பேரழகினைக்கண்டும் உன்னை விரும்பாத ஒருவன் இருப்ப னாயின், ஒன்று அவன் அலியாக இருக்கவேண்டும்.அன்றி அவன் நின்னினுஞ் சிறந்த அழகியாள் ஒருத்தியை மணந்த வனாக ருக்கவேண்டும். நல்லது; நீ ஆடிப்பாடுகையில் அவ்விளைஞர் உன்னைக் கண்டு எத்தகைய மனநிலையி லிருந்தார்? குறிப்பா லாயினும் அறிந்தனையா?

6

என்

அமராவதி: ஆம், சிறிதறிந்தேன். அவ்விளைஞர் என்னைத் தவிர அங்கிருந்த வேறெவரையுமே பார்த்திலர். ஆட்டத்தின் பொருளை நன்குணர்ந்து களித்தார்.யான் பாடிய பாடல்களின் பொருளையும் இனிய இசையையும் உணர்ந் துணர்ந்து தன்னை மறந்த மகிழ்ச்சியுடையராகவே காணப் பட்டார். இருந்தவாற்றால் அவர் முத்தமிழிலும் வல்ல ஓர் எழில் கிளர் காளையாகவே தோன்றுகின்றார்.

.

தோழி: நல்லது. உன் தந்தையார் உங்கள் இருவர் மன நிலையினையுந் தெரிந்து கொண்டவராக அப்போது காணப்பட்டனரா? அவரது குறிப்பு எத்தகையதாயிருந்தது?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/122&oldid=1580724" இலிருந்து மீள்விக்கப்பட்டது