உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/123

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

90

❖ LDM MLDMOED -12 →

அமராவதி : யான் அவ்விளைஞரைக்கண்டு நாட்டங் காண்டதும், அவ்விளைஞர் என்னையும் என் ஆடல் பாடல் களையும் உற்றுநோக்கி மகிழ்ந்ததும் என் தந்தையாருளத்திற்கு இசைவாயில்லையென்பதை அவரது முகக்குறிப்பால் அறிந்து சிறிது வாட்டமுற்றேன்.

தோழி: ஆம் அம்மா. எனக்கும் அப்படித்தான் தோன்றி யது; அதனால் யான் சிறிது அச்சமும் எய்தினேன். நின் அன்னையாரும் அமைச்சர் நம்பிப்பிள்ளையும் நும் மிருவர் மனநிலையினையும் அறிந்து முதலில் மகிழ்ந்தனராயினும், பின்னர் நின் தந்தையாரது சினக்குறிப்பினையறிந்து வெருக்கொண்டமையினையுந் தெரிந்து கொண்டேன்.

அமராவதி : எவர் என்ன குறிப்புடையராயினும் இருக் கட்டும். யானோ அவரைக்கண்டது முதல் வேறொரு பிறப்புடையவளாய் விட்டேன். இதற்குமுன் யான் காணாத, யான் அறியாத ஓர் இன்பஉலகம் என் கண்முன்னே தோன்றா நிற்கின்றது! அதன்கண்ணே அவ்விளைஞர் என்னை அடிமை கொண்ட ஒரு கதிரொளித் தெய்வமாய்த் திகழ்கின்றனர்!

முன்னஞ்சேர் பனிப்பாறை முழுதுருக்குங் கதிரவன்போல் என்னெஞ்சங் கரையவரும் இளைஞனையான் கண்டதற்பின் முன்னெஞ்சிற் புதைகிடந்த மூதுணர்வு பெருகிஎழ

வு

என்னெஞ்சம் படுதுயரம் எடுத்துரைக்க இயலேனால்!

ஏந்திழாய் என்னையவர் இணைவரேல் உயிர்வாழ்வேன் நீந்தலாக் காதலெனை நிலைதிரித்தும் நெஞ்சுகந்த ஏந்தல்பால் உய்த்திலதேல் இடர்ச்சுழியில் அகப்பட்டு மாய்ந்திடுமென் னுயிரென்று மற்றவர்க்கு மொழியாயோ? தாமரையின் இதழ்வரைந்த தன்மையெனத் தயங்கும்விழி காமருளம் பாய்ந்தென்னைக் கவர்ந்தசெயல் அறிவானோ? தேமுறுவல் என்னுயிரைத் தேடியுடன் தெருட்டியதும்

பூமகளின் சேய் அனையான் பொருந்தவுணர்ந் திடுவானோ?

தோழி: அதில் ஏன் ஐயமுறுகின்றனை? அவர் தம் அழகிய விழிநோக்கத்தாலும் புன்சிரிப்பாலுந் தாம் நின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/123&oldid=1580725" இலிருந்து மீள்விக்கப்பட்டது