உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/124

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

91

மேற்கொண்ட காதலைப் புலப்படுத்தி யிருப்பதோடு உயிருள்ள பொற்பாவையேயனைய நீ தம்மேற் காதல் நீ

கொண்டமையினையும் அறிந்தேயிருக்கின்றார்.

அமராவதி : ஆமடி நீலம், அஃதுண்மைதான்; ஆனாலும், அவரை இன்னாரென்றும், அவர் பெயர் இன்னதென்றும், அவர் எங்கிருப்பவரென்றும் ஏதோன்றுந் தெரியவில்லையே? அவரைப் பற்றி உனக்கேதாவது தெரியுமா? அல்லது தெரிய முயன்றனையா?

தோழி : அவரைப்பற்றித் தெரிந்தாலென்ன? தெரியா விட்டாலென்ன? நீங்கள் இருவீருங்கொண்ட காதலை உங்களுக்குள் உங்கள் உங்கள் உள்ளத்தளவாய்த்தான் வைத்துக் கொள்ள வேண்டும். நின் தந்தையார் அறிந்தால் இது தீங்காய் முடியுமன்றோ?

அமராவதி :

ஆற்றாது வருந்துமெனை ஆற்றும்வகை காணாமல் மாற்றான சொற்கூறி மடித்திடுதல் நன்றாமோ? கூற்றான நஞ்சேறிக் குலைந்துள்ளந் திரிவார்க்கு வேற்றான செய்வாரை மிகவுமே ஒத்தியால்!

தோழி : அமராவதி, நான் என்னம்மா செய்யக் கூடும்? நின் தந்தையார் அறிந்தால் என் தலை போய் விடுமே,

அமராவதி : அங்ஙனமாயின் நீ செவ்வையாய் உயிர் வாழ்! நான் இனி உயிர் வாழ்வேன் என்று நினையாதே.

து சொல்லி ஏங்கி உணர்விழந்து விழுகின்றாள்)

தோழி : (உடனே அவளைத் துடிதுடித்தெடுத்து முகத்திற் பனிநீர் தெளித்துச் சாந்தாற்றிக் கொண்டு வீச, அவட்குச் சிறிதுணர்வு வரக்கண்டு மனந்தேறி)கண்மணி அமராவதி, நீ உயிர் துறக்க நான்மட்டும் உயிர் வாழவா? நீ காதலித்த அவ்விளைஞரை இன்னாரெனக் கண்டறிந்து அவரை உன்னுடன் கூட்ட முயல்வேன். மனந்தேறு. நீ விரும்பிய அவ்விளைஞரை உனக்குக் கொடுத்தருளும்படி அம்மையையுஞ் சிவபெருமானையுந் தொழுது வேண்டுவோம் வா.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/124&oldid=1580726" இலிருந்து மீள்விக்கப்பட்டது