உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/125

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

92

மறைமலையம் 12

(இருவருங் கன்னிமாடப் பூங்காவிலுள்ள கோயிலிற் சென்று இறைவியையும் இறைவனையுந் தொழுதபின் அமராவதி பாடு கின்றனள்.)

தந்தையுரை கேளாமல் தான்வேட்ட தலைவனையே முந்தைநீ மணந்ததுவும் முறையன்றோ என்தாயே! முந்தை நீ மணந்தமுறை முதன்மைபெறு கற்பானால் எந்தையினும் எனக்கினிய காதலனை ஈந்தருளே!

இயல்பாக எழுங்காதல் எவ்வுர்க்கும் இசைந்தவள் நீ உயலாகா மயலாலென் உளமுவந்தாற் றருதியால் உயலாகா மயலாலென் உளமுவந்தாற் றருகிலையால் பெயலாருஞ் சடையானைப் பெட்டது நீ பிழையாமே. அன்னையினும் அன்புடையாய் அப்பனிலும் அருளுடையாய் உன்னையே நம்புமெனை ஓம்பிடுதல் கடனன்றோ, உன்னையே நம்புமியான் உணர்ந்துருகும் காதலனைப் பின்னே நீ தருகிலையேற் பிறிதுதுணை ஏதன்னாய்?

(இன்நேரத்திற் கோயிலுக்கு விளக்கேற்ற வந்த பணிப்பெண்கள் சிலர் தாம் சிறிது தொலைவிற் பேசிக்கொண்டு வந்த பேச்சின் முடிவிற் கூறிய “வேண்டியது விரைவிற் கிடைக்கும்” என்னுஞ் சொற்கள் காதில்விழ, அமராவதியுந் தோழியும் மிகமகிழ்ந்து, அச்சொற்கள் இறைவி அருள் செய்தனவாகவே துணிந்து மீண்டும் அம்மையப்பரை வணங்கிக்கொண்டு கோயிலுக்கு வெளியே வருகின்றனர்)

தத்தை : (எதிரே வந்து வணங்கி) இளவரசியார் நீடு வாழ்க! ஆசிரியர் தில்லைவாணர் நமது பூங்காமண்டபத்தில் வந்து காத்துக் கொண்டிருக்கின்றார்.

அமராவதி : இதோ வந்துவிட்டோமென்று ஆசிரி யர்க்குத் தெரிவி: (தன் தோழியை நோக்கி) என்னடி நீலம்! இதற்குமுன் யான் அறியாத ஓர் உள்ளக்களிப்பு என்னகத்தே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/125&oldid=1580727" இலிருந்து மீள்விக்கப்பட்டது