உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/143

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

110

மறைமலையம் 12

தோழி: என் கண் அனையாய்! நீ இங்ஙனமெல்லாம் ஆற்றா தரற்றுவது என் உயிரையே வாட்டுகின்றது! நீ திரையை நீக்கி ஆசிரியரைக் கண்டது முதல் இந்த மூன்று நாளுந் தில்லைவாணர் நோயாய் கிடந்து, நின் திருமுகத்தைக் கண்டபின்னேதான் நோய் தீர்ந்து நலமாயிருக்கின்றார். நீயும் இந்த மூன்றுநாளாக நின்னை மறந்த நிலையிற் படுக்கை யிலேயே கிடந்தாய்! ஆசிரியர் உனக்கெழுதிய திருமுகத்தைக் கண்டபின்றானே நீயும் உணர்வு தெளிந்தனை. உன் திருமுகத்தை அவரிடம் சேர்ப்பிக்கவும் அவரது திருமுகத்தை உன்னிடம் மறைவாய்ச் சேர்ப்பிக்கவும் யான்பட்ட அல்லலை நீ அறிவாய். அதுமட்டுமா! உன் பெற்றோரும் அண்ணனும் நீ உணர்விழந்து கிடந்த நிலையைக் கண்டு அடைந்த ஆற்றாமையோ மிகப் பெரிது. அவர்களை ஆற்று விக்கவும், நின்நோயின் உண்மை அவர்கட்குப் புலப்படாமல் மறைக்கவும் எவ்வளவு அலக்கணுற்றேன்! இதற்கிடையில் எத்தனை மந்திரக்காரர்! எத்தனை குறிகாரர்! எத்தனை மருத்துவர்! அவ்வளவு பேர்க்கும் ஈடு கொடுக்க யான் பட்ட துன்பம் என்னால் எடுத்துரைக்க முடியாது! உன் அன்னை யார் நாலைந்து நாழிகைக்கு முன்னேதான் தமது மாளிகை யிற் படுக்கைக்குப் போனார். அவர்க்கும் மற்றைத் தோழி மார்க்குந் தெரியாமல் உன்னைத் தனியே இங்குக் கொணர் தற்கு எவ்வளவு பாடு! எல்லாம் நம் அம்பலவாணனே அறிவான்!

அமராவதி : அதெல்லாமிருக்கட்டும். நம் ஆசிரியர் தில்லைவாணர் யார்? அவரைப்பற்றிய முழு வரலாறுந் தெரிந்தனையா? அவர் நாளையாவது நமக்குப் பாடஞ் சொல்ல வருவாரா? அவரும் என் மேல் அளவுபடாக் காதல் வாய்ந்தவரா யிருக்கின்றனரே? பாடஞ்சொல்லுங்கால் அவர் என்னைப் பார்க்கவும் யான் அவரைப் பார்க்கவும் வாய்ப்பு இல்லையே! தோழிமாரும் என் அன்னையாரும் அப்போது அடுத்தடுத்து வந்து நம்மைப் பார்க்கின்றனரே! அன்றைக்கு யான் திரையை நீக்கி அவரைக்காண நேர்ந்த போது, உன்னைத்தவிர ல்லாமற்போனது

வேறு யாரும்

எல்லாம்வல்ல நம் இறைவன் செயலன்றோ! என்னால் தாங்க முடியாத இந்நோய்க்கு ஏதேனும் மருந்து கண்டனையா?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/143&oldid=1580745" இலிருந்து மீள்விக்கப்பட்டது