உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

109

மூன்றாம் நிகழ்ச்சி : பத்தாங் காட்சி

களம் : கன்னிமாடத்தின் பின்னுள்ள பூங்கா மண்டபம்.

காலம் : உவாமூன்றாம் நாள் நள்ளிரவு.

அமராவதி : அடி நீலம்! ஏன் இந்த நெய்ப்பொங்கலை அருந்தச் சொல்லி என்னைத் துன்புறுத்துகின்றனை? பால் தானும் பருகல் என்னாலாகாது. என் காதலனைக் காணாமல் என்னுயிரோ தத்தளிக்கின்றது! இதோ! குயில் கூவும் ஓசையைக் கேட்டனையா? இஃதென்னுயிரைக் கொள்ளை கொள்ளுங் கூற்றுவனது அழைப்பொலியாகவன்றோ காணப்படுகின்றது! இத்தேமாவின் உச்சியிலிருந்து கூவும் அக்குயிலைத் துரத்திவிடு! இதோ! இந்நிலவொளியின் கடுமையையும், இவ்விளந் தென்றலின் வன்செயலையும் பார்!

மதியின் கதிராம் பெருந்தீயை மறுகுமென்மேல் மாட்டுதற்குப், பொதியின் றென்றல் பூவிலுறை பொடியை வாரிப் புகுந்தப்பி, உதியின் செயல்போற் கவிந்தூதும் உளவை ஓராய்! உற்றதுணை மிதியின் ஏனோர் மேலிருந்து மிதிப்ப ரென்றல் மிகையன்றோ?

நீலம்! என் ஆருயிர்த் தோழியாகிய நீயே என் காதற் காழுநனை என்பாற் காணர்ந்து சேர்ப்பியாமல் என்னைத் துன்புறுத்துகின்றனை என்றால் உயிரில் பொரு ளாகிய திங்களுந் தென்றலும் என்னைத் துன்புறுத்துதல் சொல்ல வேண்டுமோ! துணையில்லாதவர்களை மெலி யாரும் வலிந்து வந்து வருத்துவரென்பது உண்மையா யிருக்கின்றதே! ஐயோ! மெய்யாகவே நீ என் உயிர்த் தோழியா? உண்மையைச் சொல்லிவிடு! இதோ! இந்த வாவியில் வீழ்ந்து என்னுயிரை மாய்த்து விடுகிறேன்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/142&oldid=1580744" இலிருந்து மீள்விக்கப்பட்டது