உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/149

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

116

❖ LDMMLDMOED -12 →

அம்பிகாபதி : உதோ தோன்றும் ஓடையின் மருங்கே பொன்னிற் கடைந்து திரட்டிய ஓர் அழகிய பெண் பாவை ஒளிர்வது பார்மின்! அஃதென் காதலியையே முழுதும் ஒத்திருந்தது; அது கண்டு அதனைக் கவர அணுகினேன்; ஆனாற்,

காதலியின் கருவிழிபோல் அதன் விழிகள் காண்கிலவே கோதலிலாக் கனியிதழ்கள் குறுஞ்சொற்கள் கூறுகில காதலிலாத் தனியுயிர்ப்பும் மணம்கமழத் தருகிலதே

ஆதலினாற் பொலம்பாவை அருகணைந்தும் அடைந்திலெனால்

அமராவதி : நல்லது, அப்பொற் பாவையையும் வேண் ாத நீர் வேறென்ன செய்தீர்?

அம்பிகாபதி:

காணப் பேசாக் கமழா உயிரா

மாணாப் பாவைக்கு மாட்சி நல்கிய

மூலப் பாவை நீலப் பூவென

விழிப்பதுஞ் செய்யுஞ் செழிக்க மொழியும் முகிழ்விரி முல்லையின் மகிழ உயிர்க்கும் ஆதலி னதனைக் காதலிற் காண்குவென், காணு மதனைப் பேணிக் கவர்வென், என்றியான் போத நின்பெருந் தோழி ஈங்கெனைக் கொணர்ந்து நிறுவினள், ஏங்கிய உள்ளத் துறுதுயர் ஒழியக் கள்ளவிழ் பூங்குழலாய் நின் பொலிவினைக் கண்டு வான்குலாம் அணங்கே ஈங்குநிற் பவளென்

றெண்ணினெ னாகலின் அண்ணிய நின்னைக்

கவர்ந்துகொண் டேகல் தவிர்ந்தனென்

செய்வதறியா மையலுற் றேனே!

அமராவதி :

மையலுற்று மயங்கிய நும்மை

இம்மலர்த் தொடையலாம் இருந்தொடர் தன்னால்

இறுகப் பிணித்தென் நறுமலர்க் கட்டிலில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/149&oldid=1580751" இலிருந்து மீள்விக்கப்பட்டது