உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

சிறைசெய் திணைநகின் மருப்பிற் குத்தி

முறைசெய் தென்கடன் முடிப்பென்

நிறைகவர்ந் தென்னை நெகிழ்வித்தீரே!

117

(மலர் மாலையாற் கட்டித் தன் காதலனைத் தன் பஞ்சணைக்கு ஈர்த்துச் செல்கின்றாள்)

அம்பிகாபதி :

இத்தகைய சிறையடைய

எத்தனை நாள் தவம்புரிந்தேன் முத்தனைய மூரலாய்!

மொழிக்குமொழி தித்திக்குந்

தத்தையே! யானடைந்த

தனிப்பேற்றை எவர்பெற்றார்!

இத்தனைக்குங் கைம்மாறொன்

றெங்ஙனம்யான் ஆற்றுவெனே!

அமராவதி :

அரும்புலமைக்களஞ்சியமாய் அழகினுக்கோர் உறைவிடமாய் விரும்புமென துளத்தெழுதும் ஓவியமாய் விளங்குமுமைப் பெரும்புவியிற் பெறுவதினுங் கைம்மாறு பிறிதுளதோ? கரும்பினுமென் அகத்தினிக்குங் காதல்வளர் கலையமுதே!

அம்பிகாபதி : என்னாருயிர்ப் பாவாய்! அமராவதி! விடியற் காலம் அணுகுகின்றது! எங்ஙனம் உன்னைப் பிரிந்து போவதென்று என் நெஞ்சமோ ஏங்குகின்றது! இத்தனை நாள் உன்னைக் கூடாமல் வருந்தினேன். இப்போது உன்னைக்கூடி வருந்துகின்றேன்!

அமராவதி : ஆம் பெருமான். உங்களை யான்தான் எங்ஙனம் பிரிந்திருப்பேன்! இந்த இராப்பொழுது ன்னுஞ் சிறிது நீளலாகாதா! கதிரவன் வராமற் றடை செய்த

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/150&oldid=1580752" இலிருந்து மீள்விக்கப்பட்டது