உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

118

மறைமலையம் 12

நளாயினியே போல் இன்னுமொரு கற்புடை நங்கை இங்கில்லையா? என் கண்ணாளா! இன்னுஞ் சிறிது நேரம் இங்கிருங்கள்! என் தோழி வருவாள். அப்புறம் நீங்கள் செல்லலாம். நாளை மாலையில் எமக்குப் பாடஞ் சொல்ல ரு வீர்களல்லவா? அதுதான் என்னுயிர்க்கு ஆறுதல் அளிப்பது.

(தோழி வருகின்றாள்)

தோழி : அம்மா அமராவதி! கடாரத்து நீரில் இட்ட நமது நாழிகை வட்டிலில் இருபத்தைந்து நாழிகை ஆய்

விட்டது. விடிவதற்கு முன் நின் கணவர் இவ்விடத்தை விட்டு ஏகல் வேண்டும். இன்னும் ஐந்து நாழிகையில் ஊரவர் விழித்துக் கொள்வர்!

அமராவதி : ஏடி நீலம்! இதோ வருகின்றோம்! (கணவனைக் கட்டித்தழுவி விடைதர, அவன் அவளை முத்தமிட்டுப் புறப்படுகின்றான்) கருத்தாய்ப் போய் வாருங்கள் பெருமானே!

தோழி : பெருமானே! இவ்வழியே வாருங்கள்! இ வ் வழியே வாருங்கள்!

(அழைத்துச் சென்று அவனை நூலேணிமேல் ஏறச் செய்ய, அவன் அவளை வாழ்த்திப் போய்விடுகிறான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/151&oldid=1580753" இலிருந்து மீள்விக்கப்பட்டது