உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

119

நான்காம் நிகழ்ச்சி: முதற் காட்சி

களம் : அரண்மனைப் பூந்தோட்டக் குடிசை;

நேரம் : நள்ளிரவு

தோட்டக்காரன் : அடி என் கண்ணாட்டி வெள்ளச்சி; என்னடி செய்யிறது! நம்ம ராசா பூசைக்கு வேணும் பூவெ எவனோ வேலியெ தாண்டி வந்து ராவேளையில் பறிச்சிக் கிட்டு போறான். ராசாவோ “எங்கடா, கருங்குவளைப்பூ, அல்லிப்பூ, தாமரைப்பூ? எங்கடா மகிழம்பூ, பவளமல்லி, சந்தனப்பூ, நாரத்தம்பூ, பன்னீர்ப்பூ? எங்கடா முல்லைப்பூ, சம்பங்கிப்பூ, பிச்சிப்பூ?” என்று நாடோறும் என்னக் கேட்டுக் கேட்டு என்மேல் சீறி விழுறார். இன்னெ ராவுலே அந்த திருடனெக் கண்டு பிடிச்சு நாளெக் காலம்பெறெ அவனெ ராசாகிட்ட ஒப்பிக்காவிட்டா, ராசா என்னெ தோட்டத்தெவிட்டுத் தொரத்தி விடுவாராம். என்னடி செய்யிறது! நம்ம பிளெப்பு வாயிலே மண்ணு விளும் போலிருக்குதே!

வெள்ளைச்சி : ஆமாங்கறே. நாம எப்படிப் பௌப் போம்! எப்படியாவது இன்னெ ராமுளுக்க நாம முளிச்சிக்கிட்டு இருந்து அந்த திருட்டுப் பயலெக் கண்டு பிடிப்போம் வா. நாம தூங்கப்படாது.

(அங்ஙனமே இருவரும் விழித்துக் கொண்டு காவலிருப்ப, நில வொளியில் அம்பிகாபதி தோட்டத்தினுட் புகுந்து பூக்களைப் பறிக்கின்றான்)

தோட்டக்காரன் : வெள்ளச்சி, அதொ பார்த்தியா! திருடன் வந்து பூப்பறிக்கிறான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/152&oldid=1580754" இலிருந்து மீள்விக்கப்பட்டது