உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

120

மறைமலையம் 12

அவ

வெள்ளைச்சி : அவனெ இப்போ பிடிக்கப்படாது பூவெப் பறிச்சுக்கிட்டு எங்கே போறான்னு L பார்த்து, னுக்குத் தெரியாமே அவன் பின்னாலே போயி எந்த வீட்டில நொளெயிறான்னு பார்த்து ஒடனே ராசாவுக்குத் தெரிவிச்சா ராசா காவலாளெ ஏவி அவனெப் பிடிச்சுக்குவார். நாம அவனெப் பிடிக்கப்படாது; அவன் கையிலே கத்தி வச் சிருந்து நம்மெ வெட்டி விட்டா என்ன செய்யிறது!

நீ

தோட்டக்காரன் : ஆமடி எங்கண்ணே! நீ சொல்லுறது சரிதான்; திருடனென்னா எனக்கு ரொம்ப அச்சம்.

(அம்பிகாபதி பூக்களைப் பறித்துக் கொண்டு வேலியின் வெளியே வந்து காளிகோயிற் பக்கம் போய் நூலேணி வழியே மதிலைத் தாண்டி அமராவதியிடஞ் செல்கின்றான்)

ஐயையோ! இதென்னடி அந்தத் திருட்டுப்பய ராசா மக அமராவதியின் தோட்டத்துக்குள்ளே மதிலெத்தாண்டிப்

போறானே! கொத்தவாலண்டே ஓடிப்போயி சால்

லட்டுமா?

வெள்ளச்சி : சீ! சும்மாயிரு! அவன் திருட்டுப்பய அல்ல. அவன் திருட்டுப்பயலாயிருந்தா, அவ்வளவு ஒயரமான மதிள்மேலேறிப் போவத் தோட்டத்துக்குள்ளேயிருந்து ஒரு கயித்துச் சுருணெ வளியே வந்து வந்து விளுமா? கன்னி மாடத்திலே எவளெயோ இவன் வச்சிருக்கிறான். அவளுக் காகத்தான் இவன் பூவெப் பறிச்சிக்கிட்டுப் போறான்.

தோட்டக்காரன் : அப்படியானா, இவனெ எப்படி ராசா கிட்டே பிடிச்சுக்கிட்டுப் போயி என்ன சொல்லுறது?

வெள்ளைச்சி : இவன் கன்னிமாடத் தோட்டத்துக் ள்ளே போய் வார சேதியெ நாம சொல்லப்படாது. நாம சொன்னா ராசாவுக்கு ரொம்ப வருத்தம் வரும். நம்மெயெ திருப்பிக் கொள்ளுவார்; நம்ம தலெ போய்விடும். இவன் திரும்பி எறங்கிப்போவெயிலே இவனெக் கொத்தவாலெக் கொண்டு பிடிச்சுக்கிட்டு ராசாவெடம் போயி இவன்தான் பூப்பறிச்ச திருடன்னு சொல்லு, வேறெ ஒண்ணுஞ் சொல் லாதே! ( இருவரும் மதிற்புறத்தே தொலைவிற் காத்திருக் கின்றார்கள்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/153&oldid=1580755" இலிருந்து மீள்விக்கப்பட்டது