உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/154

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

121

நான்காம் நிகழ்ச்சி: இரண்டாங் காட்சி

களம் : அமராவதியின் ஒப்பனை மா ம்.

நேரம் : அதே நாளிரவு

அமராவதி : என்னாருயிர்ப் பெருமானே வரவேண்டும்! வரவேண்டும்! பேதையேன் பொருட்டாக இந்த ஏழு திங்களும் நீங்கள் இந்நள்ளிரவில் வந்து இடர்ப்பட்டு வந்து அல்லற் படுகின்றீர்களே! இதனை நினைக்க நினைக்க என் நெஞ்சம் ஆற்றாத் துயரில் ஆழ்கின்றதே! இதற்கேதும் மருந்தில்லையா?

அம்பிகாபதி : கண்மணி! என் காதற் செல்வி! பெறு தற்கரிய பொருளை ஒரு வறியவன் பெற்று இன்புற வேண்டு மானால் அதற்கான முயற்சியை அவன் அல்லும் பகலுஞ் செய்து அல்லற்பட்டே தீரல் வேண்டும். நீயோ ஒப்புயர்வற்ற ஒரு வேந்தர் பெருமானுக்கு ஒரேயோர் அருமைப் புதல்வி யானோ ஓர் ஏழைப்புலவன் மகன்; உங்களை அண்டிப் பிழைப்பவன். யான் என் காதற் கற்பகமாகப் பெறலானது எத்தனையோ பிறவிகளில் யான் சிவபெருமானை நோக்கிச் செய்த தவத்தின் பயனேயாகும்.

உன்னை உன்

66

வளைபயில் கீழ்கடல் நின்றிட

மேல்கடல் வானுகத்தின்

துளைவழி நேர்கழி கோத்தெனத்

தில்லைத்தொல் லோன்கயிலைக்

கிளைவயின் நீங்கியக் கெண்டையங்

கண்ணியைக் கொண்டுதந்த

விளைவையல் லால்விய வேன்நய

வேன்றெய்வம் மிக்கனவே

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/154&oldid=1580756" இலிருந்து மீள்விக்கப்பட்டது