உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/155

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

122

❖ LDM MLDMOED -12 →

(திருச்சிற்றம்பலக் கோவையார்)

கண்ணே! நம்மையொருங்கு கூட்டிய அம்பலவனே நம்மை என்றும் பிரியாநிலையில் வைக்க வழி செய்தல் வேண்டும்.

.

அமராவதி : ஐயோ! பெருமானே! யான் ஏன் ஓர் அரசன் மகளாய்ப் பிறந்தேன்! உங்களைக் கூடுதற்கு யான் இழைத்த பெருந்தவத்தில் ஏதோ பிழைபட்டமையாலன்றோ, அங் ஙனம் பிறந்தேன். ஓர் ஏழைக் குடியானவன் வீட்டில் பிள்ளை யாபிறந்திருந்தால் அச்சமின்றி உங்களை மணஞ் மணஞ் செய்து கொண்டு இனிது வாழ்வேனே. நீங்கள் இங்கே வரும்போதுந், திரும்பி வெளியே செல்லும் போதும் என் வயிற்றில் நெருப்பைக் கட்டிக்கொண்டிருக்கின்றேனே! என் அன்னை யார் உடம்பட்டாலும் என் தந்தையார் என்னை உங்களுக்கு மணஞ்செய்து கொடுக்கச் சிறிதும் உடம்படமாட்டாரே! தான் அரசன் என்ற இறுமாப்பால் தன்னைப் போன்ற ஓர் அரசன் மகனுக்கே என்னை மணஞ்செய்விக்க ஒரே பிடியாய் நிற்கின்றார். என்னை என் மாமன் குலசேகர பாண்டியனுக்கு மணஞ் செய்விக்க எண்ணங்கொண்டு அவனைத் தம்மிடம் வரவழைத்திருந்தபோது, யான் அவனை மணக்க சைந் திலேன். அது முதல் அவர் என்மேல் வருத்தம் உடை யவ ராகவேயிருக்கின்றார். ஆனாலும், அவர் கல்வியில் மிக்க விருப்பமுடையவராகையால் எனக்குப் பாடங் கற்பிக்க உங்களை ஆசிரியராக அமர்த்தி வைத்தார். நாம் ஒருவரை ஒருவர் பாராதபடி அதற்கு எத்துனைக் கட்டுக்காவலுஞ் செய்து வைத்திருக்கின்றார்!

அம்பிகாபதி : ஆம், ஆம் கண்மணி. நாம் ஒருவரை யொருவர் பார்த்திருப்பமோ, காதலித்திருப்பமோ என்பதை அறியத்தான், அவர் அன்றொருநாள் நீ சிவபெருமான் கோயிலில் ஆடிப் பாடும்போது என்னை வருவித்திருந்தார். ஆனால், நல்ல காலமாய் அதற்கு முன் நாம் ஒருவரை யொருவர் பார்த்துக் காதலித்த தின்மையால், அன்றைக்கு நமது முகக்குறிப்பிலிருந்து நாம் ஒருவரையொருவர் பார்த் திலாமையைத் தேர்ந்து ஒருவாறு மனவமைதியடைந்தார். நாம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/155&oldid=1580757" இலிருந்து மீள்விக்கப்பட்டது