உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

123

காதலித்தபின் அவர் அங்ஙனம் என்னை வருவித்திருந்தன ராயின், எவ்வாறாயினும் நம் காதல் நம் முகக்குறிப்பில் வளிப்பட்டிருக்கும்; அதனைத் தெரிந்திருந்தால் அவர் என்னை அரண்மனை வாயிலிலும்

அன்றைக்கே

வர

வொட்டாமற் றடை செய்திருப்பார். யானும் நின்னைப் பெறும் என் பிறவிப் பெரும் பயனை ஒருங்கே இழந்து போயிருப்பேன். நம்மைப் பிணைத்து வைத்த இறைவன் பேரருளுக்கு எனது புல்லிய அன்பைச் செலுத்து தலன்றி வேறெது செய்ய வல்லேன்?

அமராவதி: உண்மைதான் பெருமானே! யான் ஆடிப் பாடும்போது நீங்கள் என்னை இன்னாளென அறிந்து கொண்டீர்களா? யானோ அப்போது உங்களை இன்னா ரென்று சிறிதும் அறிந்திலேன்.

அம்பிகாபதி: இல்லை அமராவதி, உன்னை அரண் மனையிலுள்ள ஒரு நடனமாது என்றே எனக்குச் சொல்லி வைத்திருந்தார்கள்.

அமராவதி: ஆ! எவ்வளவு கட்டுக்காவல்! என் ஆசிரிய ரையே யான் தெரிந்துகொள்ளாமற் செய்தார்கள்! ஆனா லும், என் மனக்கினிய காதலரை யான் அடையாமலிருக்க நம் அருட்கடலான ஆண்டவன் தடை செய்வானோ! இறைவ னருளுக்கு முன் மக்களின் கட்டுக்காவல் என் செய்யும்? நல்லது, கோயிலில் என்னைக் கண்டபோது உங்கள் நெஞ்சம் என்ன நிலையிலிருந்தது?

அம்பிகாபதி:

கட்புலனிற் காணாத என்னுயிரே காணுமா றுருவு கொண்டு விட்புலத்தி னின்றிறங்கு மின்போல

விளங்கியதோ! மின்னுக்கில்லாத்

தட்பமுறு மென்குவளை தார்முல்லை

இலவமலர் தாங்கித் தோன்றும்

பெட்புவளர் மென்கொம்பாய்ப் போந்ததுவோ!

என்றெண்ணிப் பிறிதுற் றேனே!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/156&oldid=1580758" இலிருந்து மீள்விக்கப்பட்டது