உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/157

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124

யதும்,

மறைமலையம் 12

அமராவதி : யானும் அங்ஙனமே உங்களை நோக்கி

கண்ணுங் கருத்துங் கவருமோர் விண்ணவன் காட்சிநல்க மண்ணுற்றென் கண்முன்னர் வந்தனனென்றே மயங்கிமனம் எண்ணுற்றென், நம்பி! நுமையெய்த லெங்ஙனென் றேங்கலுற்றேன் பண்ணுற்ற பாடலும் ஆடலுஞ் சற்றே பழுதுற்றெனே!

அம்பிகாபதி:

இருவேம் நெஞ்சமும் ஒருவேம் நெஞ்சமாய்க்

காதலிற் கழுமிய மேதகு நிலையை

நின்னை ஈன்ற பொன்னன அன்னையார்

கண்டுண் மகிழ்ந்தன ரேனும், மண்டிய சினமிகு தந்தையின் மனமது தெரிந்து மாழ்கி யிருந்தனர்; பாழ்வினை யேனும் நடுக்குறு முளத்தொடு நின்னை நோக்க இடுக்கப்பட்ட நிலையினை யாகிக் கறங்கிய தோர்ந்து அலந்தனன் மானே!

ஓ! நாம் அப்போதிலிருந்த காதல் நிலையினைக் கண்ட நின் தந்தையார் நமக்கேது தீங்கு செய்வரோவென யான் திகிலடைந்தபடி அவர் இதுகாறும் ஏதொரு தீங்குஞ் செய் திலர். அதுபற்றி நாம் இப்போது துன்புறல் வேண்டாம். இதோ யான் இப்போது கொணர்ந்திருக்கும் நறுமண மலர் களை நின் கருமணற்கூந்தலில் சூட்டிக் களிக்கின்றேன். (தன் மடியினின்றும் பூக்களை எடுக்கின்றான்)

அமராவதி : (அவற்றைப் பார்த்து) என் பெருமானே! இவைகள் பூக்கள் அல்ல; இவை என்னைச் சுடும் நெருப்புத் தணல்களே!

அம்பிகாபதி : (மருண்டு) கண்மணி அமராவதி! ஏன் இந் நறுமண மலர்களை இவ்வளவு வெறுத்துப் பேசுகின்றனை? யான் நினக்கு யாது பிழை செய்தேன்?

அமராவதி : இப்பூக்களை இடை டையிடையே எங்கிருந்

தெடுத்து வருகிறீர்கள்?

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/157&oldid=1580759" இலிருந்து மீள்விக்கப்பட்டது