உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/158

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி

125

அம்பிகாபதி : இதற்கு முன் கேளாத கேள்வி இப்போது எதற்காக எழுந்தது?

அமராவதி : அரண்மனைப் பூந்தோட்டத்தில் என் தந்தையார் வழிபாட்டிற்கென்று நாடோறும் எடுக்கப்படுங் கெழுவிய நறுமலர்கள் டையிடை யிடையே குறைகின்றன வென்னும் பேச்சு அரண்மனையில் உலாவுகின்றதாம்; அவைகளைக் கவர்ந்து செல்லுங் கள்வனை உடனே கண்டு பிடித்துக் கொணரும்படி என் தந்தையார் ஒரு கட்டளையும் பிறப்பித்திருக்கின்றனராம்.

அம்பிகாபதி : என்னாருயிரே, நினக்குத் துன்பந்தரும் இம்மலர்கள் இனி இங்கு வரா!

அமராவதி : ஏன் என் வலக்கண்ணுந் தோளுந் துடிக் கின்றன? ஐயோ கண்ணாளா! உங்களுக்கேதேனுந் தீங்கு நேர்ந்தால் யான் என் செய்வேன்! எங்ஙனம் உயிர் வாழ்வேன்! (தன் காதலனைக் கட்டிக் கொண்டு கண்ணீர் சொரி சாரி கின்றாள்)

கு

அம்பிகாபதி : என்னாருயிர்ச் செல்வி! அமராவதி! நமக்கேதொரு தீங்கும் வராதிருக்க, அதனை எதிர்பார்த்து வருந்துவது தக்கதன்று. நம்மை ஒருங்கு பிணைத்த நம் மிறைவன் நம்மைக் கைவிடான். (கோழி கூவத் திடுக்கிட்டு) கண்ணே! கேட்டனையா கோழி கூவுதலை. விடியுமுன் போய் வருகின்றேன். (தோழியும் வர வர அரிதில் விடைபெற்று மதிற்புறத்தே இறங்கி விடிநிலவிற் செல்கின்றான்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/158&oldid=1580760" இலிருந்து மீள்விக்கப்பட்டது