உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/159

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

126

நான்காம் நிகழ்ச்சி : மூன்றாங் காட்சி

களம் : மதிற்புறத்துத் தெரு.

நேரம் : அதே இரவின் வைகறை.

நகர் காவற்றலைவன் : யாரேடா அங்கே செல்பவன்? செல்லாதே நில் (அம்பிகாபதி நிற்கின்றான் தோட்டக் காரன் ஓடி வந்து அவனருகே நின்று)

தோட்டக்காரன் : ஐயா! இவன் தான் அரமெனப்பூந் தோட்டத்லே ராவேளையிலே பூந்து பூவெப்பறிச்சிக் கிட்டு போற திருடென்.

அம்பிகாபதி : ( நகர் காவலனை நோக்கி) ஐயா யான் திருடன் அல்லேன், யான் காளிகோயிற் பூசகன்.

நகர்க்காவலன் : நல்லது, இந்த நேரத்தில் உமக்கிங்கு என்ன வேலை?

அம்பிகாபதி : நாளை மார்கழித்திங்கள் பிறக்கப் போகின்றது; அதற்காக ஐயை கோயிலில் வைகறை வழிபாடு நடத்தல் வேண்டிக் கோயிலுக்கு வந்து செல்கின்றேன்.

தோட்டக்காரன்: ஐயா, இவன் சொல்லுறது முளுப் பொய். நம்ம மாராசா ன் ன ன ராவுக்குள்ளே இவனெப் பிடிச்சிக்கிட்டு வந்து நாளெக் காலம்பர ஒப்பிக்காட்ட என்னெத் தோட்டத்ெ தோட்டத்தெ விட்டு விட்டு தொரத்தி விடுவதாச் சீறிச்சொன்னார். அதுனாலே, பொண்டாட்டியும் இந்த ராமுளுக்கத் தோட்டத்திலெ முளுச்சிக்கிட்டு இருந்து இவனெக் கண்டு பிடிச்சோம். இவனெத் தவர வேறே யாரும் இந்த ராவேளெயிலே இந்தப்

நானும்

என்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/159&oldid=1580761" இலிருந்து மீள்விக்கப்பட்டது