உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/172

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

அழைத்து வந்திருக்கின்றார்.

139

காவலன் : ஆனாலும், இதனை அரசன் அறிந்தால் இது பெருந் தொல்லைக்கிடமாகும்! ஆகவே நீங்கள் வைகறைப் பொழுதுக்குமுன் இங்கே வராதிருக்கும்படி உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்ளுகின்றேன்.

இருவரும் : நல்லது, அங்ஙனமே செய்கின்றோம்.

(நகர்க் காவலன் போய் விடுகின்றான்)

நயினார் : (மெல்லிய குரலில்) பார்த்தனையா அம்பிகாபதி! நீ நூலேணியில் ஏறும்போது இந்நகர்க் காவலன் வந்திருந்தால் உனது வாழ்க்கை என்னவாயிருக்கும்? உன் காதலியின் வாழ்க்கைதான் என்னவாயிருக்கும்? ஐயையின் அருளினாலன்றோ இருவீரும் இன்றைக்குத் தப்பிப் பிழைத்

தீர்கள்!

அம்பிகாபதி : ஆம், ஆம், நயனார் பிள்ளை! என் செய்வேன்! என் காதலியைச் சென்று காணாமல் என்னுயிர் என்னுடலில் இராது!

நயினார் : நாம் என்ன செய்யலாம்! ஊழ்வினை மூண்டு தடை செய்கின்றது! நீ அமராவதியை முற்றுமே மறந்து விடு!

அம்பிகாபதி: நீ காவேரியை மறந்துவிடு. இல்லையேல் நான் என் அமராவதிபாற் செல்ல வழிசெய்! (இரவெல்லாம் இருவருங் கலந்து சூழ்கின்றனர்.)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/172&oldid=1580774" இலிருந்து மீள்விக்கப்பட்டது