உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/171

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

138

மறைமலையம் -12

காவலன் : இன்று காலையில் என்னுடன் அரசனிடம் வந்தவர் நீர் தாமே?

அம்பிகாபதி : ஆம், ஆம், நம் அமைச்சர் மகன் நயினார் பிள்ளையும் இதோ வந்திருக்கின்றார்.

காவலன் : (நயினாரை நோக்கி) தங்களை வணங்கு

கின்றேன்.

6

நயினார் : நீடு வாழ்தி! மரங்களின் இலைகளிலிருந்து பனித்துளிகள் சொட்டுச் சொட்டென்று வடிகின்றன. ஊதற் காற்றோ சாரலைக் கொண்டு வந்து மேனி மேல் அப்பு கின்றது; இத்தகைய பனிக் காலத்தில் பனிக் காலத்தில் இவ்விரவில் நீ தன்னந்தனியே ஊரைச் சுற்றி வருவது உனக்கு மிக்கதொரு துன்பமாயிருக்குமே!

காவலன்: என் செய்வது! ஐயா! அரசன் ஏவியபடி தானே நடக்க வேண்டியது! ஊர் முழுவதுஞ் சுற்றுபவர் என்கீழ்ப் பணியாளர்.யானோ திருடனைக்கண்டு பிடித்தாக வேண்டும்! சிறிது காலமாக அரண்மனைப் பூந்தோட்டத்திற் புகுந்து சிறந்த பூக்களைக் கவர்ந்து போகுங் கள்வனைப் பிடிக்கும் பொருட்டே இரவு முழுதும் இந்தப் பக்கத்திற் காத்து உலவும்படி அரசர் எனக்குக் கடுமையாகக் கட்டளை யிட்டிருக்கின்றார். யான் தனியே உலவவும் இல்லை. என் கீழ்ப் பணியாளர் பலரை இப்பக்கங்களில் ஒளிந்திருக்கச் செய்துள்ளேன். அது கிடக்கட்டும். நீங்களேன் இக் கடுங் குளிர்கால இரவில் இங்கே வந்திருக்கின்றீர்கள்? அம்பிகாபதி ஐயா மேல் நம்மரசனு ஏதோ சிறிது ஐயுறவு உண்டா யிருக்கின்றது; ஆகையால் அவர் இந்நேரத்தில் மீண்டும் இங்கிருந்தது தெரிந்தால் அவர்க்கு அவ்வையுறவு மிகுதியாய் விடும்.!

நயினார் : இது மார்கழித் திங்களாதலால்அம்மைக்கு வைகறைப்போதில் வழிபாடு நடத்த வேண்டியிருக்கின்றது. அந்நேரத்தில் துயிலுணர்ந்து கோயிலுக்கு வருவதோ பெருந் தொல்லையாயிருக்கின்றது. முன் நேரத்திலேயே இங்கு வந்து படுத்திருந்து வைகறையில் வழிபாடாற்றுவது தான் இவர்க்கு இசைந்தது. தம்மேல் நீ ஐயங்கொள்வை யென்று கருதியே தமக்குத் துணையாக இவர் என்னை என்னை இங்கு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/171&oldid=1580773" இலிருந்து மீள்விக்கப்பட்டது