உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/170

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

137

வேண்டற் பாலதேயாம். அமராவதியும் என்னுடன் உயிர் துறக்கத் துணிந்திருக்கின்றாள்!

நயினார் : இனி, எனக்குப் பேச வாயில்லை. இறைவன் விட்டபடிதான் நடக்கும்! நல்லது! இப்போது நீ யாது செய்யப் போகின்றாய்?

அம்பிகாபதி : நகர்க் காவலன் இன்றைக் காலையில் என்னை அரசன்பால் அழைத்துச் சென்றது அமராவதிக்குத் தெரிந்திருக்கும். அதனால் அவள் மிகவும் நெஞ்சங் கலங்கி யிருக்கின்றாள். இன்று மாலையில் யான் அவட்குப் பா பாடஞ் சொல்லுகையில் அவளது மன நிலையினை யறிந்து துன் புற்றேன். அப்போது அவள் அன்னையுந் தோழிமாரும் உடனிருந் தமையால் அவளைப் பார்த்து ஆறுதல் பகர எனக்கு வாய்ப்பில்லை. இப்போதவளென்னை எதிர் நோக்கியபடி யாயிருப்பாள். இதோ இப் பூம்பந்தை இம்மதிலுக்கு அப்பால் தோட்டத்தினுள்ளே எறிந்தேனானால், அமராவதியின் உயிர்த்தோழி நீலம் ஒரு நூலேணியை இப்பக்கம் எறிவள்; அதன் வழியே அமராவதிபாற் போய் வருகிறேன். அதுகாறும் நீ எனக்குதவியாய் இங்கே காத்திருப்பாயா?

நயினார் : ஆகா, காத்திருப்பேன், நீ இப்போதிருக்கும் நிலை நெருப்பாற்றில் மயிர்ப்பாலத்தின் மேல் நடப்பவன் நிலையோடொத்த தாயிருக்கின்றது. இனி நீ இரவில் எங்கு சென்றாலும் யானும் உனக்குத் துணையாகக் கூடவே வந்திருக்க உறுதி செய்திருக்கின்றறேன் பார்! யாரோ வரும் அரவங் கேட்கின்றது.

(இருவரும் பேச்சை நிறுத்தி உற்றுக் கேட்கின்றனர்)

(நகர்க் காவலன் வருகின்றான்)

நகர்க் காவலன் : யார் அங்கே காளி கோயிலில்?

க்கோயிற் பூசகன்

அம்பிகாபதி : யான்றான் இக்கோயிற்

அம்பிகாபதி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/170&oldid=1580772" இலிருந்து மீள்விக்கப்பட்டது