உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/169

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136

மறைமலையம் -12

நயினார் : ஐயையோ! ஈதென்ன தீவினை! இருவீருயிருங் கூற்றுவன் கையிலன்றோ சிக்கியிருக்கின்றன! நெருப்பை வாரி மடியிற் கட்டிக்கொண்டது போலாயிற்றே! நின் தங்கை துவக்கத்திலேயே அஞ்சியது உண்மையாய் வந்து முடிந்ததே! திரைக்கு வெளியேயிருந்து பாடங் கற்பித்த நீயும், உள்ளே தோழியர் புடை சூழ இருந்து பாடங் கற்ற இளவரசியும் எங்ஙனங் காதல் கொண்டீர்கள்?

அம்பிகாபதி : (அவ்வரலாறு முழுதுஞ் சொல்லி)

“விழியாற் பிணையாம் விளங்கியலான் மயிலாம் மிழற்றும் மொழியாற் கிளியாம் முதுவானவர் தம் முடித்தொகைகள் கழியாக் கழற்றில்லைக் கூத்தன் கயிலை முத்தம் மலைத்தேன் கொழியாத்திகழும் பொழிற் கெழிலா மெங்குலதெய்வம்’

நண்பா, அமராவ

அமராவதியை நீ கண்டிலை. அவளைக் காணும் வரையில் யானும் ஒரு குருடனாகவேயிருந்தேன். அவளைக் கண்ட பின் என் காட்சியுங் கருத்தும் பெறுதற் கரிய ஒரு பெருங் கண்காட்சியைக் கண்டன. ஒரு பெரும் பேற்றைப் பெற்றன!

நயினார் : அமராவதி பேரழகியென்பதை நின் தங்கை சொல்ல யானுந் தெரிந்திருக்கின்றேன். அத்தகைய பேரழ கியைக் கண்டு நீ காதல் கொண்டதும் இயற்கை தான். காதலைத் தடை செய்ய வல்லவர் எவருமில்லை, அதனைத் தடைசெய்ய வல்லதும் ஏதுமில்லை. ஆனாலும், நம்மரசன் பொல்லாதவன் ஆயிற்றே! கல்வியில் வல்லவனாயினுங் கற்றார்பால் நன்கு மதிப்புடையனாயினுந், தான் அரசனென்ற இறுமாப்புந் தனக்கு முன் கற்றவரெல்லாம் இழிந்த இரவலரென்னும் எண்ணமும் உடையனாயிற்றே! இக்கள வொழுக்கந் தெரிந்தால் அவன் உன்னை உயிரோடு விடான்! ஆதாலால் இக்காத லொழுக்கத்தை மறந்துவிடு!

அம்பிகாபதி : ஈதொன்றைத் தவிர நீ வேறேது சொன் னாலும் அவ்வண்ணஞ் செய்வேன், அமராவதியை மறப் பதும் என்னுயிரைத் துறப்பதும் ஒன்றே. அவளை மறவா திருந்து, அரசனால் என்னுயிர் போவதாயின் அஃதென்னால்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/169&oldid=1580771" இலிருந்து மீள்விக்கப்பட்டது