உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்பிகாபதி அமராவதி *

135

தாராது. வேறோர் அழகிய மாதைக் கண்டு நின்னுள்ளங் காதலிற் கலங்காதிருக்குமாயின் அப்போதுதான் நீ காதலித்த மங்கையின் வனப்பும் அவள் வழிபட்ட நின் காதலின் உரமும் பாராட்டற் பாலனவாயிருக்கும்.

அம்பிகாபதி : நீ கூறுவதுண்மையே. ஆனாலும், என் காதலியைப் பார்க்கிலும் எழின் மிக்காள் ஒருத்தியைக் காணினும் என்னுள்ளம் அவளை நயவாது.

நயினார் : அதைத்தான் நான் பார்க்க வேண்டும். நல்லது. நீ புகழேந்திப் புலவர் மகள் தங்கத்தைப் பார்த்திருக்கின் றனையா?அவள் பருவம் அடைந்த இரண்டு மூன்று ஆண்டுகள்தாம் ஆகின்றன. காவேரிக்கும் அவட்கும் ஏறக் குறைய ஒரே அகவைதான் இருக்கும். அவளுஞ் சொல்லிய முடியாப் போரழகி.

அம்பிகாபதி : ஆம்! ஐந்தாறு ஆண்டுகளுக்கு முன் யான் அவளைப் பார்த்திருக்கிறேன். அப்போதே அவள் அழகிய சிறுமியாயிருந்தாள். இப்போதவள் பேரழகியாகத்தான் இருக்க வேண்டும். அங்ஙனமாயின் நீ ஏன் அவளைக் காதலித்துத் திருமணம் செய்துகொள்ளவில்லை?

நயினார் : இ க்கேள்விக்கு என்னால் விடை சொல்லல் இயலாது. காவேரி என்னுள்ளத்தைக் கவர்ந்த பின், வேறு மொரு மாது கவர்தற்கு என்பால் வேறுமோர் உள்ளம் இல்லையே!

அம்பிகாபதி: அங்ஙனந்தானே எனக்கும்.

நயினார் : : அதைத்தான் நான் தெரிந்துகொள்ளல் வேண்டும். அஃதிருக்கட்டும். நின் காதலி யார்? யான் அறியச் சால்.

அம்பிகாபதி : (மெல்லிய குரலில்) நண்பா! திடுக் கிடாதே! அச்சப்படாதே! என்னாருயிர்க் காதலி நம்மரசன்... நயினார் : (திகில் திகில் கொண்டு) ஐயோ என்ன சொல்

கிறாய்?

அம்பிகாபதி : நம்மரசன் மகள் அமராவதிதான் என் ஆருயிர்க் காதலி!

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/168&oldid=1580770" இலிருந்து மீள்விக்கப்பட்டது