உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/167

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134

மறைமலையம் 12

நயினார் : ஓ! அம்பிகாபதி! நீ சொல்வது எனக்கு மிக்க வியப்பைத் தருகின்றது! நீ யார் மேல் வெறி கொண்டாய்?

அம்பிகாபதி : யானும் அழகுக் கொடியான ஒரு நங்கை மேற்றான் காதல் வெறி கொண்டேன். அந்நங்கையின் பொருட்டு என்னுயிர் போவதாயினும் அதனை பொருட்டாக எண்ணேன்.

ஒரு

நயினார் : ஓ! அவ்வளவுக்குத் துணிந்துவிட்டனையா! (முன்னொருகால் அம்பிகாபதி தனக்குச் சொல்லிய சொற் களைச் சொல்லிப் பகடி பண்ணுவானாய்ச்) சீ! ஒரு பெண்ணுக்காக நீ நின் சிறந்த உயிரை மாய்க்கக் கருதுவது சிறிதுந் தக்கதன்று. காதலென்பது கட்டுக்கடங்காததா? நம் அறிவினால் அதனை அடக்குதலன்றோ ஆண்மை?

நீ

அம்பிகாபதி : நல்லது! முன்னொரு கால் யான் உனக்குச் சொல்லிய சொற்களையே இப்போ தெனக்குத் திருப்பிச் சொல்லுகின்றாய்! ஆயினும், நீ கொண்ட காதலினும் யான் கொண்ட காதல் சாலப் பெரிது! என் காதலிக்கு ஒப்பாகவோ உயர்வாகவோ சொல்லத்தக்க ஒரு பெண் இவ்வுலகில் இருப்பாளென்று யான் நம்பவேயில்லை.

66

நயினார்:

காதல் மிக்குழிக் கற்றவுங் கைகொடா ஆதல் கண்ணகத் தஞ்சனம் போலுமால் தாது துற்றபு தங்கிய வண்டனார்க்

கேதமிற்றென எண்ணுமென் நெஞ்சரோ”

என்று மூதறிஞர் மொழிந்தபடி கல்வியிலும் நுண்ணறிவிலும் அழகிலும் பிற நற்குணங்களிலும் ஈடும் எடுப்பும் இல்லாத நீயே ங்ஙனங் காதலுணர்வில் மயங்கிவிட்டனையென்றால், நினக்கெவ்வகையிலும் ஒவ்வாத எம் போல்வார் நிலை என்னாம்! நின் கண்ணுக்கு நீ காதலித்த மங்கை ஒப்புயர் வற்றவளாய்த் தோன்றுதல் போலவே என் கண்ணுக்கு யான் காதலித்த காவேரியும் ஒப்புயர்வற்றவளாகவே தோன்று கின்றாள். காவேரி நின் தங்கையாதலால் அவளது அழகின் நலம் உனக்கு அத்துணை வியப்பினையும் விழைவினையுந்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/167&oldid=1580769" இலிருந்து மீள்விக்கப்பட்டது