உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

133

நான்காம் நிகழ்ச்சி: ஐந்தாங் காட்சி

களம் : காளி கோயில்:

:

காலம் : நள்ளிரவு

நயினார் பிள்ளை : அம்பிகாபதி வைகறையில் நடத்தும் வழிபாட்டிற்கு அந்நேரத்தில் நாம் இங்கு வந்தாற் போதாதோ? இவ்வளவு முன்னதாக இக் கடுங்குளிர் காலத்து இந்நள்ளிரவில் அங்கு வரவேண்டுவது ஏன்?

அம்பிகாபதி : நேற்றிரவு இந்நேரத்தில் அரசனது பூங்காவிற் புகுந்து பூக்களைக் களவு செய்த கள்வன்யானே! இவ் வு ண்மையை என்னாருயிர் நண்பனாகிய உனக்குத் தரிவிக்கவே இந் நேரத்தில் உன்னை இங்கழைத்து வந்தேன். என் தங்கை அறிந்தால் திகில் கொண்டு ஏங்கி விடுவாளன்றோ? தெரிவித்திலேன்.

தை

அதனால், இதனை நமதில்லத்தில்

நயினார் : இதென்னப்பா П வ்வளவு துணிவான செயலைச் செய்து விட்டனையே! ஐயை வழிபாட்டிற்கு வேண்டுமென்று நீ அரசற்குச் சொல்லி விடுத்தால் எவ் வளவோ சிறந்த பூக்களெல்லாங் குடலை குடலையாக வந்து சேருமே! நீ பேசுவதைப் பார்த்தால் ஏதோ வெறி பிடித்தவன் போற் காணப்படுகின்றனையே!

அம்பிகாபதி : உண்மையிலேயே நான் வெறி பிடித்தவ னாகத்தான் ஆய்விட்டேன். உன்னைப் பிடித்த வெறி, என்னை இன்னும் மிகுதியாய்ப் பிடித்து விட்டது!

நயினார் : எனக்கென்ன வெறி?

அம்பிகாபதி : என் தங்கை காவேரி மேல் நீ கொண்ட

வெறிதான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/166&oldid=1580768" இலிருந்து மீள்விக்கப்பட்டது