உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/165

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

132

❖ LDM MLDMOED -12 →

காவேரி : அண்ணா, இப்போதுதான் எனக்கும் உயிர் வந்தது. இனி நீங்கள் இரவில் தனியே புறஞ் செல்லலாகாது. னி அப்பாதான் இன்னும் ஒரு கிழமையில் இங்கு வந்து விடு வார்களே. அவர்கள் வந்தபின் அவர்களுடன் சென்று ஐயைக்கு வழிபாடாற்றுங்கள். அது வரையில் உங்கள் ஆருயிர் நண்பர் நயினார் பிள்ளையை அழைத்துக் கொண்டு சென்று வழிபாடாற்றுங்கள், (நயினார் பிள்ளையை நோக்கி) உங்களுக்கு இங்ஙனந் தொல்லை கொடுப்பதைப் பற்றி மன்னித்தல் வேண்டும்.

நயினார் : கரும்பு தின்னக் கூலியா? காவேரி. இதன் வாயிலாகவாவது யான் என் நண்பனுடன் சென்று ஐயையை வைகறையில் தொழுது வழுத்தும் பேறு கிடைத்தது.

(பின்னர் மூவருந் தத்தந் தொழின்மேற் செல்கின்றனர்)

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/165&oldid=1580767" இலிருந்து மீள்விக்கப்பட்டது