உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மறைமலையம் 12.pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கி

அம்பிகாபதி அமராவதி

131

அப்போதுதான் நிலா வெளிச்சம் வந்தது; அதனால் இவரைக் கண்டுபிடித்தேன்' என்றான். மீண்டும் அவர் ‘நீ இவரைக் கிட்டப்போய்ப் பார்த்தனையா? என்று வினவ, அவன் கிட்டப்போனால் இவர் ஓடிவிடுவாரென எண்ணி இவர்க்குத் தெரியாமல், நூற்றைம்பதடி தொலைவில் மறைந்திருந்து இவரைப் பார்த்தோம்' என்றான் ‘அவ்வளவு தொலைவில் நீ பார்த்தவர் உருவமும் இப்போது கிட்டப் கி பார்க்கும் இவர் உருவமும் ஒன்றெயென நீ எப்படி உறுதிப் படுத்துவாய்?' என அமைச்சர் வினவ, அவன் 'இவரைத்தவிர வேறே யாரும் அங்கே கண்ணுக்குத் தென்படவில்லை. அதுவல்லாமலும், இவர் பூக்களைப் பறித்துக் கொண்டு, தோட்டத்து வேலியைத் தாண்டிவெளியே போனபோது, நாங்களும் மறைவாகவே இவரைப் பின்தொடர்ந்து, போனோம். இளவரசியின் தோட்டத்து மதிற்சுவர்ப் பக்க மாய்ப் போன இவர் திடீரென எங்கள் கண்களுக்குத் தென்படவில்லை; நாங்கள் அங்கேயே பத்து நாழிகை வரையில் காத்திருக்க மறுபடியும் இவர் எங் கண்களுக்குத் தென்பட்டார்’ எனச் சொல்கையில், அவன் மனைவி ‘இல்லை மாராசா' வர் காளி கோயிலில் அதுவரையில் ஒளிந்து கொண்டிருந்தா ரென்று நினைக்கின்றேன்' என்று இடை மறித்துப் பேசினாள். அதுகேட்ட நம் அமைச்சர் ‘மன்னர் பிரானே! இவ்விருவரும் தாங்கண்ட கள்வனை நெருங்கிப் பார்த்திலர். பின்னரும் பத்து நாழிகைக்குப்பின் இவரை விடியப்போகுந் தறுவாயிற் காளி கோயிலினின்றும் வரக் கண்டதாகக் கூறுகின்றனர். இவர்கள் கண்ட கள்வன் எங்ஙனமோ தப்பிப்போய் விட்டான். ஐயை கோயிலில் வைகறை வழிபாடு ஆற்றி வெளிவந்த அம்பிகாபதி யாரைத் தாங் கண்ட கள்வனாக மாறியுணர்ந்து பிடித்து வந்திருக்கின்றனர்' என்று நுவலவே, அரசன் என்னை நோக்கி 'அம்பிகாபதி' இவர்கள் அறியாமல் உனக்குத் துன்பங் கொடுத்ததற்காக மிக வருந்துகின்றேன். இனி நீ நின் இல்லம் செல்லலாம்' என்று விடையளித்தனர்.

நீ

நயினார் : இது கேட்டு பின் எனக்குயிர் வந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மறைமலையம்_12.pdf/164&oldid=1580766" இலிருந்து மீள்விக்கப்பட்டது